கிரிக்கட் வர்ணனையாளராகிறார் மஹேல

507
Mahela Jayawardene
@Getty Images

இலங்கை அணியின் முன்னால் தலைவர் மற்றும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தன அடுத்த மாதம் தொடங்கும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரின் போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) வர்ணனையாளர்கள் குழுவில் பணியாற்றும்  இங்கிலாந்து அணியின் முன்னால் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கட் வர்ணனையாளர்களோடு இணைந்து தனது கிரிக்கட் வர்ணனை வாழ்க்கையைத் துவங்க உள்ளார்.

 அடுத்த வருடம் அவுஸ்திரேலியா பயணிக்கிறது இலங்கை – போட்டி அட்டவணை 

ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவானது முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர்களான சேர் இயன் பொத்தம், டேவிட் கொவர், நசார் ஹுசைன், மைக்கேல் அர்தர்டன் மற்றும் பொப் வில்லிஸ் ஆகிய வர்ணனையாளர்களை உள்ளடக்கியது.

38 வயதான மஹேல ஜயவர்த்தன சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிவுற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் போது உலகின் முன்னணி கிரிக்கட் தகவல்களைக் கொண்ட வலையத்தளமான Cricinfo இல் கிரிக்கட் ஆய்வாளராக செயற்பட்டிருந்தார். ஆனாலும் மஹேல ஜயவர்தன ஒரு கிரிக்கட் வர்ணனையாளராக இணையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறுப்பிடத்தக்க விடயமாகும்.

 இங்கிலாந்துடனான தொடரின் டெஸ்ட் குழாமில் இணையப் போகும் வீரர் யார்?