DRS முறைமைக்கு எதிராக மீண்டும் கருத்து வெளியிட்ட சச்சின்

122
Sachin Tendulkar
ICC

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நடைமுறைப்படுத்திவரும் நடுவர் மீளாய்வு முறைமையை (DRS) மீண்டும் விமர்சிக்கும் முகமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் நீண்டகாலமாக DRS முறைமையை விமர்சித்து வருகின்றார். இந்தநிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில் DRS முறைமையினால் தவறவிடப்பட்ட ஆட்டமிழப்புகள் மற்றும் வழங்கப்பட்ட ஆட்டமிழப்புகள் என்பவற்றால் மீண்டும் தன்னுடைய விமர்சனத்தை சச்சின் வெளியிட்டுள்ளார். 

BCCI யின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஹேமங் அமின்

இந்திய கிரிக்கெட் சபையின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக

விதிமுறையின் படி, மீளாய்வு முறைமையின் போது, பந்து ஸ்டம்பில் 50 சதவீதத்துக்கும் குறைவாக தாக்குமாயின், கள நடுவர் ஆட்டமிழப்பை வழங்கியிருந்தால், அது ஆட்டமிழப்பாகவும், அவர் ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்தால் அது ஆட்டமிழப்பு அல்ல எனவும் DRS தீர்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அதேநேரம், LBW ஆட்டமிழப்பை களத்தடுப்பு அணி, நடுவர் ஆட்டமிழப்பு வழங்காமல் மேன்முறையீடு செய்தால், பந்து 50 சதவீதத்துக்கும் குறைவாக ஸ்டம்பில் தாக்கினால் அது ஆட்டமிழப்பு அல்ல என அறிவிக்கப்படும். எனவே, இந்த முறைமைக்கு சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

“ஐசிசி நீண்ட காலமாக DRS முறையை பயன்படுத்தி வருகின்றது. அதில் ஒன்றை மாத்திரம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ப்ரையன் லாராவுடன் இடம்பெற்ற காணொளி சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், “துடுப்பாட்ட வீரர் அல்லது பந்துவீச்சாளர் ஒருவர் கள நடுவரின் ஆட்டமிழப்பை மேன்முறையீடு செய்வதற்கான காரணம், குறித்த தீர்ப்பின் மீது அவர்களுக்கு மகிழ்ச்சி அல்ல என்பதால் தான்.

எனவே, மூன்றாவது நடுவரிடம் மேன்முறையீடு சென்றால், டென்னிஸ் போட்டிகளில் மேற்கொள்ளப்படும்  மேன்முறையீடு போன்று, ஸ்டம்பில் பந்து எப்படி தாக்கினாலும் ஆட்டமிழப்பினை வழங்கவேண்டும்” என்றார்.

சச்சின் டெண்டுல்கள் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “1000 சதவீதம் சரியான கருத்து” என குறிப்பிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி DRS முறைமையை 2016ம் ஆண்டு பயன்படுத்தியதுடன், DRS முறைமையை இறுதியாக பயன்படுத்திய அணியாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர் 2013ம் ஆண்டு ஓய்வுபெற்றிருந்த நிலையில், அதுவரையில், குறித்த முறைமையை பயன்படுத்துவதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார் என்ற வதந்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க