இலங்கையில் 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம்??

302

இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை இலங்கையில் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்து செல்லும் இலங்கை வீரர்கள்

2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற போதும், கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக அதனை அங்கு ஒழுங்கு செய்வதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளன. 

இந்த நிலையில் குறித்த தொடரினை வேறு நாடு ஒன்றிற்கு மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முயற்சித்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில், அதற்கு மத்திய கிழக்கு ஆசிய நாடான  ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவு செய்யப்படலாம் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

எனினும், இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்திய ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருப்பதால், IPL தொடர் நிறைவடைந்த பின்னர் அங்கே உள்ள மைதானங்களில் T20 உலகக் கிண்ணத்தினை நடாத்துவது சிக்கலாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 

இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் அவிஷ்க, ஓசத மற்றும் நுவன் பிரதீப்

எனவே, இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு ஒன்றினை பெறும் நோக்குடனேயே இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆரம்பித்திருக்கின்றது. 

அதன்படி, இந்த மாதத்தின் கடைசிப்பகுதியில் T20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நாடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒத்துழைப்புடன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் உறுதி செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…