ஆஸி. பயிற்சியாளர்கள் எவரையும் அணுகவில்லை – BCCI

53
JAY SHAH

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த எவரையும் அணுகவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளரான ஜெய் சாஹ் குறிப்பிட்டுள்ளார்.  

>> தம்புள்ள அணியின் உரிமையாளர் கைது ; LPL தொடர் நடைபெறுமா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் ட்ராவிட் T20 உலகக் கிண்ணத்தை அடுத்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரின் இடத்தினை புதிய பயிற்சியாளராக யார் நிரப்புவார் என்கிற கேள்வி நிலவுகின்றது 

இவ்வாறான நிலையில் ரிக்கி பொண்டிங், ஜஸ்டின் லங்கர் போன்ற அவுஸ்திரேலிய பயிற்சியாளர்கள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பினை நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.   

எனினும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரான ஜெய் சாஹ் தாம் அவுஸ்திரேலிய பயிற்சியாளர்கள் எவரினையும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அணுகவில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றார் 

அதேநேரம் கௌதம் கம்பீர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற ஸ்டீபன் ப்ளமிங் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன ஆகியோரினையும்  தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அமர்த்த எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியாகியிருக்கின்றன. எனினும் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை 

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் தொடர்பில் ஆழமான அறிவு கொண்ட ஒருவரினை அமர்த்த எதிர்பார்ப்பதாகவும் ஜெய் சாஹ் குறிப்பிட்டிருக்கின்றார் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<