பங்களாதேஷ் பயிற்சியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று

48

பங்களாதேஷ் அபிவிருத்தி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ஆஷிகுர் ரஹ்மான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) ஊடகக் குழுத் தலைவர் மொஹமட் ஜலால் யூனுஸ் கருத்து தெரிவிக்கையில்

>> தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு

“கொரோனா வைரஸுக்கான பரிசோதனையில் அவருக்கு சாதகமாக முடிவு வந்துள்ளது. எனவே ரஹ்மான் தற்போது டாக்காவில் உள்ள முக்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

அவர் மார்பு நெரிசலை அனுபவித்து வருகிறார். விரைவாகக் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.  

இதனிடையே, தான் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷிகுர் ரஹ்மான் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தினார்.

எனக்கு பரிசோதனை அறிக்கை திங்கட்கிழமை கிடைத்தது. அந்த அறிக்கை கொவிட்-19 நேர்மறையானது என்று கூறுகிறது என்று ரஹ்மான் க்ரிக்பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் அவர், முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது கழுத்தில் வீங்கிய டொன்சில் இருப்பதாக நினைத்தேன். எனக்கு முதலில் தொண்டை வலி இருந்தது, பின்னர் மெதுவாகக் காய்ச்சல் தொடங்கியது. பின்னர் மார்பு வலி வர ஆரம்பித்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தேன்” என்றார்.

>> கொரோனா வைரஸினால் உயிரிழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

2002ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்த ஷிகுர் ரஹ்மானுக்கு, ஆறு வருடங்கள் நீடித்த தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருபோதும் தேசிய அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை

ரஹ்மான் முறையே 15 முதல்தர மற்றும் 18 லிஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 மற்றும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

33 வயதான இவர் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியுடன் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை பங்களாதேஷில் 16,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<