115வது வடக்கின் பெரும் சமருக்கான திகதிகள் அறிவிப்பு

115th Battle of the North 2022

245

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிகள் மோதவுள்ள 115வது வடக்கின் பெரும் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்தியக் கல்லூரியின் ஏற்பாட்டில் இந்த முறை 115 வடக்கின் பெரும் சமர் இம்மாதம் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்டுவரும் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக வடக்கின் பெரும் சமர் பிற்போடப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான கலந்துரையாடலின்படி, எதிர்வரும் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் வடக்கின் பெரும் சமர் நடைபெறும் என யாழ். மத்தியக் கல்லூரி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்பொழுதும் போன்று 3 நாட்கள் கொண்ட போட்டி யாழ்.மத்தியக் கல்லூரியின் மைதானத்திலும், ஒரு நாள் போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<