ஐசிசியின் பொது முகாமையாளராக வசீம் கான் நியமனம்

Sri Lanka tour of Bangladesh 2022

105

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) பொது முகாமையாளராக பாகிஸ்தானின் வசீம் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் கிரிக்கெட் பொது முகாமையாளராக ஜெப் அல்லர்டைஸ் செயற்பட்டுவந்த நிலையில், அவரின் இடத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டுவந்த வசீம் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 3 வருடகால ஒப்பந்தத்தில் இணைந்திருந்த வசீம் கான், தன்னுடைய ஒப்பந்தகாலம் நிறைவுக்கு வருவதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் பதவியிலிருந்து விலகினார். அத்துடன், இங்கிலாந்து கௌண்டி அணியான லீசெஸ்டர்ஷையர் கழகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

தன்னுடைய புதிய பதவி குறித்து கருத்து வெளியிட்ட வசீம் கான், “ஐசிசியுடன் இணைவதை பெருமையாக கருதுகிறேன். எமது கிரிக்கெட் விளையாட்டை வலுப்படுத்தவும் வளர்ச்சிக்கு அழைத்துச்செல்வதற்கும், எமது உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் என்னால் காத்திருக்க முடியாது.

மகளிரின் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் ஐசிசியின் அர்ப்பணிப்பைக்கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அடுத்த தசாப்தத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை விரைவுப்படுத்துவதில் எனது பங்களிப்பை வழங்குவேன்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<