சுபர் கிங்ஸ் அணியிலிருந்து விலகும் ஹெரி புரூக்!

SA T20 League 2023

335

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SA T20 லீக் தொடரில் ஜோபர்க் சுபர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த ஹெரி புரூக் அணியிலிருந்து விலகியுள்ளார்.

ஹெரி புரூக் இங்கிலாந்து அணியின் முத்தரப்பு போட்டிகளிலும் விளையாடி வருவதன் காரணமாக அவருக்கு ஓய்வு தேவை என்பதால், இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

LPL தொடரில் போட்டியின் போக்கை மாற்றிய துடுப்பாட்ட இன்னிங்ஸ்கள்!

துடுப்பாட்ட வீரரான ஹெரி புரூக் அணியில் விளையாடமாட்டார் என்ற விடயத்தினை சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் ஜோபர்க் சுபர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

“ஹெரி புரூக் முத்தரப்பு போட்டிகளிலும் விளையாடுவதன் காரணமாக, SA T20 லீக்கில் அவர் விளையாடுவது அவருக்கு பணிச்சுமையை அதிகரிக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை சிந்திக்கிறது.  இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடமிருந்து இந்த தகவலை நாம் பெற்றுக்கொண்டோம். எனவே, மாற்று வீரர் ஒருவரை நாம் விரைவில் அறிவிப்போம்” என காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

ஹெரி புரூக் SA T20 லீக்கில் விளையாடவிட்டாலும், இந்த தொடருக்கு இடையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோபர்க் சுபர் கிங்ஸ் அணி SA T20 லீக் ஏலத்தில் ஹெரி புரூக்கை 2.10 மில்லியன் ராண்ட்டுக்கு (இலங்கை ரூபாயில் 4 கோடி 20 இலட்சம்) வாங்கியிருந்தது.

இதேவேளை ஹெரி புரூக்கை IPL தொடரின் ஏலத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, 13.25 கோடிக்கு (இந்திய ரூபாய்) வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<