தடைக்கு உள்ளாகியுள்ள உமர் அக்மல் மீது புதிய குற்றச்சாட்டு

59
Banned Umar Akmal

சூதாட்டத் தரகர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை இரண்டு முறை சந்தித்துப் பேசியது குறித்த விபரங்களை வழங்குவதற்கு பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மறுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஊழல் புகாரில் சிக்கி மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட உமர் அக்மல், தன்னை அனுகிய சூதாட்ட முகவர்களின் விபரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரிவிக்க மறுத்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.  

உமர் அக்மலுக்கு 3 வருடங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை

வழமையாக சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான..

29 வயதான உமர் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு விதிகளை மீறிய காரணத்துக்காக பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் உமர் அக்மலின் விதிமீறல் குறித்த விசாரணை ஒழுங்கு நடவடிக்கை பேனலுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு மூன்று வருட போட்டித் தடை விதிக்கப்பட்டது

இதனிடையே, தன்னை அனுகிய சூதாட்ட முகவர்கள் குறித்த விபரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் உமர் அக்மல் தெரிவிக்க மறுத்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது

இதுகுறித்து பாக் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,  

“சூதாட்டப்பேர் வழிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் உமர் அக்மலை லாகூரில் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். இது லாகூரில் உள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த தகவலை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்ல தவறினார்

எனவே, கடந்த பெப்ரவரி மாதம் 19 மற்றும் 20 ஆகிய காலப்பகுதியில் தன்னை அந்த நபர்கள் அணுகிய விடயத்தை மறைத்தது தவறு தான் என்று அவர் ஒப்புக் கொண்டார்.  

ஆனால் கடைசி வரைக்கும் தன்னை சந்தித்த தரகர்கள் என்ன பேசினார்கள் என்ற விபரத்தை பகிர்ந்து கொள்ள அவர் முன்வரவில்லை.   

அவரது நடவடிக்கை எங்களுக்கே வித்தியாசமாக தெரிந்தது. ஒரு பக்கம் சந்திப்பு விவரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனையை வெளிப்படுத்த மறுத்தார்

மேலும் இதற்காக அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஒழுங்கு நடவடிக்கை குழு அவரை அறிவுறுத்தியது. அதற்கும் உடன்படவில்லை. இதன் காரணமாகவே உமர் அக்மல் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது” என அவர் கூறினர்.

விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ள உமர் அக்மல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அந்நாட்டு வீரர் உமர் அக்மல் ஆகியோருக்கு..

இதுஇவ்வாறிருக்க, உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும், அவர் இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இதேவேளை, குறித்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முன்பாக நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வின் போதும் உமர் அக்மல் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது

ஆனால் அதற்கு பின் நடைபெற்ற விசாரணையில் தவறான புரிதலால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<