பொதுநலவாய விளையாட்டுத் தொடரின் கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகள் வெளியீடு

86
GETTY IMAGES

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுத் தொடருக்கான மகளிர் T20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளினை வெளியிட்டிருக்கின்றது. 

விராத் கோஹ்லிக்கு அபராதம் விதித்த ஐ.பி.எல் நிர்வாகம்

அதன்படி இங்கிலாந்தில் நடைபெறும் இந்த பொதுநலவாய விளையாட்டுத் தொடரின் மகளிர் T20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பினை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெற்றிருக்கின்றன.

இந்த ஆறு அணிகளும் ஏப்ரல் 1, 2021 இல் வெளியிடப்பட்ட மகளிர் T20 அணிகளுக்கான தரவரிசையின் அடிப்படையில் (முதல் ஆறு இடங்களினைப் பெற்ற அணிகள்) தெரிவு செய்யப்பட்டதுடன், மகளிர் T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஏனைய இரண்டு அணிகளும் தகுதிகாண் சுற்று ஒன்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அந்தவகையில் மகளிர் T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் எஞ்சிய அணிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 31, 2022 இல் மேற்கிந்திய தீவுகளுக்குள் அடங்கும் பிராந்திய நாடுகள் இடையே ஆரம்பமாகின்றது.  

அதேநேரம் கடந்த 1998ஆம் ஆண்டிற்குப் பின்னர், 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுத் தொடரிலேயே கிரிக்கெட் போட்டிகள் மீள நடப்பதோடு, மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுவதும் இதுவே முதல் தடவையாகும்.

கடைசியாக நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுத் தொடரின் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி, இந்தியாவினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டுத் தொடரினுடைய மகளிர் T20 கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் எட்பாஸ்டன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<