கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை 19 வயதின் கீழ் அணி பந்துவீச தீர்மானித்ததுடன், அற்புதமாக செயற்பட்டு பங்களாதேஷ் அணியை 109 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.
>>ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?<<
லிம்மி திலகரட்ன, பிரமுதி மெத்சரா மற்றும் ரஷ்மிகா செவ்வந்தி ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19வது ஓவரில் தங்களுடைய வெற்றியை உறுதிசெய்தது. தஹமி செனத்மா மற்றும் சுமுது நிசன்சலா ஆகியோர் பொறுப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தஹமி அதிகபட்சமாக 29 ஓட்டங்களையும், சுமுது நிசன்சலா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடரின் இரண்டாவது T20 போட்டி நாளைய தினம் (06) தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
பங்களாதேஷ் மகளிர் U19 – 109 (19.3) ஜனதுல் முவா 34, சுமையாக அக்தார் 29, லிம்மி திலகரட்ன 2/10, பிரமுதி மெத்சரா 2/14, ரஸ்மிகா செவ்வந்தி 2/22
இலங்கை மகளிர் U19 – 112/5 (18.5) தஹமி செனத்மா 29*, சுமுது நிசன்சலா 27, ஹபிபா இஸ்லாம் 2/22
முடிவு – இலங்கை மகளிர் 19 வயதின் கீழ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<