கிழக்கு மாகாண எல்லே போட்டிகளில் அம்பாறை மாவட்டம் சம்பியன்

249

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமான குழுநிலைப் போட்டிகளின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எல்லே போட்டிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா

விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஓவ்வொரு வீர வீராங்கனையும்..

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் அணிகள் பங்குபற்றின.

தொடரில் ஆண்களுக்கான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியும், திருகோணமலை மாவட்ட அணியும் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டன.

இதில் முதலில் துடுப்பாடிய திருகோணமலை மாவட்ட அணி, முதல் இன்னிங்ஸில் 2 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய அம்பாறை மாவட்ட அணி முதல் இன்னிங்ஸில் 13 ஓட்டங்களைப் பெற்றது.  இதன் மூலம் அம்பாறை மாவட்ட அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் அம்பாறை மாவட்ட அணி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அணி சார்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பாலமுனை ரை ஸ்ரார் விளையாட்டுக் கழகம் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட அணி
வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட அணி

பெண்கள் பிரிவு

இச்சுற்றுத் தொடரின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியும், திருகோணமலை மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் துடுப்பாடிய மட்டக்களப்பு அணி முதல் இன்னிங்ஸில் 10     ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை அணி முதல் இன்னிங்ஸில் 5 ஒட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓட்டங்களையும் பெற்றது.

தர்ஜினியின் அறிமுகம் முன்னரே கிடைத்திருந்தால்

உலகின் உயர்ந்த(208 cm) வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம்..

அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் இரண்டாவது இன்னிங்ஸில் 2 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி, தேசிய மட்டப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டி நிகழ்வுகளுக்கு அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசய ராஜ், மூத்த விளையாட்டு வீரர் ஹம்ஸா சனூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அணி
மகளிர் பிரிவில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அணி