ஆசியக்கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாத்தில் மொஹமட் நயீம்

Asia Cup 2022

434

ஆசியக்கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் நயீம் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் நயீம் இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். இவர் ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்காக 30 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

>> பங்களாதேஷ் அணியின் தலைவராக சகீப் அல் ஹசன் நியமனம்!

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மொஹமட் நயீம் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளர் ஹசான் மஹ்மூட் மற்றும் விக்கெட் காப்பாளர் நூருல் ஹாசன் சொஹான் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஹசான் மஹ்மூட்டின் முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதுடன், நூருல் ஹாஸன் சொஹானின் இடதுகை ஆள்காட்டி விரலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள காரணத்தால் இவர் இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவர்கள் இருவரும் ஆசியக்கிண்ணத்தொடரில் விளையாடமாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், பங்களாதேஷ் அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

சகீப் அல் ஹசன் (தலைவர்), அனாமுல் ஹக் பிஜோய், முஷ்பிகூர் ரஹீம், அபிப் ஹுசைன், மொஸ்டாக் செய்கட், மஹ்முதுல்லாஹ் ரியாத், செயிக் மெஹிடி, மொஹமட் சய்புதீன், முஷ்தபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மட், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹாசன் மிராஷ், எப்டொட் ஹுசைன், பர்வெஷ் ஹொசைன் இமோன், டஸ்கின் அஹ்மட், மொஹமட் நயீம்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<