ஒருநாள் போட்டியில் உலக சாதனை படைத்தார் பாபர் அசாம்

201

இங்கிலாந்து அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம், ஒருநாள் அரங்கில் அதி விரைவாக 14 சதங்களைப் பெற்றுக்கொண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

முன்னதாக நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியினைப் பெறும் நோக்கில் விளையாடியது. 

பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து T20I குழாம் அறிவிப்பு

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்களை எடுத்தது. 

அந்த அணியின் தலைலர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 158 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து, 332 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதனிடையே, பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் தலைவர் பாபர் அசாம் 14ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி புதிய உலக சாதனையொன்றை நிகழ்த்தினார். 

முன்னதாக 84 இன்னிங்ஸ்களில் 14 சதங்கள் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஹஸீம் அம்லா நிகழ்த்தியிருந்தார்.

உலகக் கிண்ணம் நடாத்த இலங்கையின் ஆதரவை நாடும் பாகிஸ்தான்

எனினும், நேற்று தனது 81ஆவது ஒருநாள் இன்னிங்ஸில் விளையாடிய பாபர் அசாம் தனது 14ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அம்லாவின் உலக சாதனையை முறியடித்தார். 

இதன்படி, ஒருநாள் அரங்கில் அதி விரைவாக 14 சதங்களைப் பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுக்கொண்டார். 

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 103ஆவது இன்னிங்ஸில் 14ஆவது சதத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தப் போட்டியில் பாபர் அசாம் இன்னும் 15 ஓட்டங்களை எடுத்திருந்தால் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 4 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த ஹஸீம் அம்லாவின் மற்றுமொரு சாதனையையும் முறியடித்திருப்பார்.

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்படும் ஹரிஸ் சொஹைல்

இதுஇவ்வாறிருக்க, நேற்றைய போட்டியில் பாபர் அசாம் இன்னும் சில சாதனைகளை முறியத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 150 ஓட்டங்களை எட்டிய முதல் பாகிஸ்தான் அணித் தலைவராக இடம்பிடித்தார். இதற்குமுன் சொஹைப் மலிக் இந்தியாவுக்கு எதிராக 2008இல் 125 ஓட்டங்களை எடுத்ததுதான் பாகிஸ்தான் தலைவர் ஒருவரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை சாதனையாக அமைந்தது. 

அத்துடன், இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 150 ஓட்டங்களை எடுத்த முதல் தலைவராகவும் பாபர் அசாம் மாறினார். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா வீரர் கிரேம் ஸ்மித் 141 ஓட்டங்களை எடுத்ததே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

இதுஇவ்வாறிருக்க, ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

ஒன்பது அறிமுகவீரர்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இங்கிலாந்து

இதில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் 158 ஓட்டங்களை எடுத்த பாபர் அசாம், ஐசிசியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 873 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

இதனால், முதலிடத்தில் இருந்த இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 857 புள்ளிகளும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…