இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 12ம் திகதி லண்டன் – தி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது.
அபார வெற்றியுடன் ஆஷஷ் கிண்ணத்தை நெருங்கும் அவுஸ்திரேலியா
மென்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில்…
நேற்று நிறைவுக்கு வந்த நான்காவது போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான குழாத்தை இன்றைய (1) தினம் அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலிருந்து எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்பட்டை உபாதைக்குள்ளான பென் ஸ்டோக்ஸ், இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது, பென் ஸ்டோக்ஸ் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்தார். இதன்காரணமாக அவர், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவும் இல்லை. இவ்வாறான நிலையில், பென் ஸ்டோக்ஸ் உபாதையுடன் அடுத்தப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் தினங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வைத்திய குழாத்தின் கண்காணிப்பில் பென் ஸ்டோக்ஸ் இருப்பார் எனவும், அதன்படி, எதிர்வரும் தினங்களில் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பிலான அறிவித்தல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குப்பைகளை அள்ளி ஆஷஸ் போட்டியை காண வந்த ஆஸி. சிறுவன்
நான்கு வருடங்களாக குப்பைகளை அள்ளி அதன் மூலம் சேர்த்த பணத்தால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியைப் பார்வையிட…
பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களான க்ரிஸ் வோர்க்ஸ் அல்லது செம் கரன் ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த போதும், போட்டிக்கான பதினொருவரில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதேவேளை, இந்த ஏஷஷ் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். இந்த ஆஷஷ் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களில் 59 என்ற அதிகூடிய துடுப்பாட்ட சராசரியையும் இவர் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடாவிட்டால், இங்கிலாந்து அணிக்கு அது பாரிய இழப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது ஆஷஷ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம்
ஜோ ரூட் (தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயார்ஸ்டோவ், ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், செம் கரன், ஜோ டென்லி, ஜெக் லீச், க்ரைக் ஓவர்டன், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், க்ரிஸ் வோர்க்ஸ்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க