பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து T20I குழாம் அறிவிப்பு

Pakistan tour of England 2021

218
England Cricket
 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடருக்கான 16 பேர்கொண்ட குழாத்தை இங்கிலாந்து கிரிக்கெட் சபை இன்று (14) அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், அணித்தலைவராக இயன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார். கொவிட்-19 தொற்று காரணமாக, இலங்கை தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

>> “மஹானாமவை தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கவேண்டும்” – முரளி

இந்தநிலையில், தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இயன் மோர்கனுடன் ஜொனி பெயார்ஸ்டோவ், ஜேசன் ரோய், ஜோஸ் பட்லர், டொம் பெண்டன், லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, ஆதில் ரஷீட், டேவிட் வில்லி, கிரிஸ் ஜோர்டன் மற்றும் டொம் கரன் ஆகியோரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய டேவிட் மலான், லிவிஸ் கிரோகரி, மெட் பர்கின்சன் மற்றும் சகீப் மஹ்மூட் ஆகியோர் T20I தொடருக்கான குழாத்திலும் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம், ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜெக் போல் T20I தொடருக்கான குழாத்தில் வாய்ப்பை தக்கவைத்துள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தலைவராக செயற்பட்ட பென் ஸ்டோக்ஸ் T20I குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவருடன், ஒருநாள் தொடரில் பிரகாசித்திருந்த பில் சோல்ட் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோருக்கும் T20I தொடருக்கான குழாத்தில் இடம் கிடைக்கவில்லை.

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர், எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து குழாம்

இயன் மோர்கன் (தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோவ், டேவிட் மலான், ஜேசன் ரோய், ஜோஸ் பட்லர், டொம் பெண்டன், லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, ஆதில் ரஷீட், டேவிட் வில்லி, கிரிஸ் ஜோர்டன், டொம் கரன், லிவிஸ் கிரோகரி, ஜெக் போல், மெட் பர்கின்சன், சகீப் மஹ்மூட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<