இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பயிற்சியாளரானார் அவிஷ்க

180

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் வரை அவிஷ் குணவர்தன இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார்

அவிஷ்க குணவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கிய ICC

அவிஷ் குணவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு வெவ்வேறான ஊழல் குற்றச்சாட்டுகளை, ஐசிசியின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கடந்த மே மாதம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து, அவருக்கு மீண்டும் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் ஈடுபட ஐசிசி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஐசிசி இன் போட்டித்தடைக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட்டுடன் அவிஷ் குணவர்தன இணைந்து செயல்படுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

முன்னதாக, இம்மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவிஷ் குணவர்தனவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் குறித்த தொடரை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது

ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் அவிஷ்க குணவர்தன

இதனிடையே, இலங்கை A அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் அணிகளின் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்த அவிஷ், இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பல திறமையான வீரர்களை கொண்டுவருவதில் மிகப் பெரிய பங்காற்றியவராவார்.

இதேவேளை, ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் முகாமையாளராக இலங்கையின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மஹிந்த ஹலங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் பயிற்சிக் குழாம் அறிவிப்பு

கல்கிஸ்ஸை புனித தோமையர் கல்லூரியின் பழைய மாணவரான அவர், இதற்குமுன் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் முகாமையாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அடுத்துவரும் மாதங்களில் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<