முதல் அணியாக சுபர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான்

106
Getty Images

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20I தொடரில், நேற்று (30) பங்களாதேஷை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அவர்களை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுக்கு தெரிவாகும் முதல் அணியாகவும் மாறியிருக்கின்றது.

ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா

ஏற்கனவே தொடரின் முதல் போட்டியில் இலங்கையை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணியினர், பங்களாதேஷ் அணியினை இந்த ஆண்டுக்கான அவர்களின் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் ஷார்ஜா நகரில் வைத்து எதிர் கொண்டனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தததோடு தொடக்கம் முதலே தடுமாற்றம் காட்டி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்கள் எடுத்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மொசாதிக் ஹொசைன் 31 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ரஷீட் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 128 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களுடன் அடைந்தது.

போட்டியின் வெற்றி இலக்கை அடைய ஆப்கானிஸ்தானுக்கு உதவியாக இருந்த வீரர்களின் நஜிபுல்லா சத்ரான் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்லாக 43 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் இப்ராஹிம் சத்ரான் 42 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன் பட்டம் வென்ற அகில தனன்ஞயவின் சென்.கிட்ஸ மற்றும் நெவில் பேட்ரியட்ஸ்

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மொசாதிக் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மான் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<