ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் அவிஷ்க குணவர்தன

Afghanistan Cricket

746

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த விடயம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ICC T20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு வெவ்வேறான ஊழல் குற்றச்சாட்டுகளை, ஐசிசியின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கடந்த மே மாதம் நிராகரித்திருந்தது. அத்துடன், அவர் மீண்டும் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அவிஷ்க குணவர்தன 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 61 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன், இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிகளையும் வகித்திருந்த இவர், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது, அவிஷ்க குணவர்தன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர், இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றியுள்ள போதும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் எப்போதும் போன்று செயற்படமுடியும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<