இலங்கை அணியின் தலைமைத்துவத்தை விமர்சித்துள்ள திசர பெரேரா

2338

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக அணியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு சகல துறை வீரர் திசர பெரேரா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.  

துடுப்பாட்டத்தில் செய்த தவறே தோல்விக்கு காரணம் என்கிறார் சந்திமால்

அவுஸ்திரேலிய பந்துவீச்சார்களுக்கு எதிராக எமது துடுப்பாட்ட ….

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடரிலிருந்து இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியின் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டார். இவர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இலங்கை அணிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமையை திசர பெரேரா, ஏஷ்லி டி சில்வாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவி வெளியிட்டிருந்த பேஸ்புக் பதிவொன்று, திசர பெரேராவை சாடுவது போல் அமைந்திருந்தது. குறித்த பதிவில் திசர பெரேரா அணியில் தொடர்ந்தும் இடத்தை தக்கவைப்பதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சரை தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு திசர பெரேராவும் பதில் வழங்கும் வகையில் பேஸ்புக் பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுடன், மக்களின் மத்தியில் தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது என திசர பெரேரா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அணியின் தலைமைத்துவத்தில் சிக்கல்கள் நிலவுவதாகவும் திசர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

திசர பெரேரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும், இலங்கை அணியின் தற்போதைய தலைவர் லசித் மாலிங்கவின் மனைவி, சமுக வலைத்தளங்களில் என் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவுகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், கிரிக்கெட் மற்றும் லசித் மாலிங்கவின் மீது வைத்திருந்த மரியாதையின் நிமித்தம் நான் மற்றும் எனது மனைவி அதனை பொருத்துக் கொண்டிருந்தோம்.

எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது, சமுகவலைத்தளங்களில் இடம்பெற்ற வாக்குவாதங்கள் சற்று தீவிரமடைந்திருந்தது.  இதனால் நான் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததுடன், மன உளைச்சலுக்கும் ஆளானேன்.

ஒருநாள் தொடரில் அயர்லாந்து A அணியை வைட்வொஷ் செய்த இலங்கை A

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு….

நான் அணியில் இடத்தை தக்கவைப்பதற்காக உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சரை சந்தித்தேன் என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நான் எப்பொழுதும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை பின்பற்றுகிறேன். அதுமாத்திரமின்றி என்னை அணியிலிருந்து நீக்குவதற்கான எவ்வித தேவைப்பாடுகளும் தெரிவுக்குழுவுக்கு இருக்கவில்லை.  காரணம், 2018ம் ஆண்டு முழுவதும் அணியை பொருத்தவரை எனது பங்களிப்பு சிறப்பாக இருந்ததை அவதானிக்க முடியும்.

அதுமாத்திரமின்றி, நான் அணிக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தேன். பாகிஸ்தான் செல்லுவதற்கு அணித் தலைவரை நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் அதனை ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால், அயல் நாடு ஒன்றுக்கு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் வரவேண்டும் என்ற நல் எண்ணத்துக்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் தான்.

எமது அணியின் தலைவராக செயற்படும் லசித் மாலிங்கவின் மனைவி என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை, சமுக வலைத்தளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இதனால், பொது மக்கள் என் மீது வைத்துள்ள நம்பகத்தன்மையை குறைத்து, பல்வேறு வகையிலும் அவதூறு பரப்பும் வகையில் செயற்படுகிறார்.  

அணியின் உடைமாற்றும் அறையில் அனுபவ வீரர்கள் இருவர் இரு பிரிவுகளாக செயற்படுவார்களாயின், அந்த அணியின் இளம் வீரர்களுக்கான சிறந்த களத்தை எம்மால் உருவாக்க முடியாது. இப்போது அணியானது பிளவுகளுடனான அணியாக உள்ளது.  அணித் தலைமை என்பது, அணியில் ஒற்றைமையையும், நிலைத்தன்மையையும் உருவாக்குவதாகும். ஆனால், இங்கு அப்படியொன்று இருக்கிறதா என்பது தெரியவில்லை. யாரும் இலங்கை அணி தோற்பதற்காக விளையாடுவதில்லை. நான் நாட்டுக்காக முடிந்தளவு திறமையை வெளிப்படுத்துகிறேன். அதனை நியூசிலாந்து தொடரில் பார்த்திருக்க முடியும்.

இலங்கை குழாத்துடன் இணையவுள்ள புதுமுக சகலதுறை வீரர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல்…

ஆனால், மீண்டும் சில நகைப்புக்குறிய பதிவுகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருந்தன.  ஆனால் எனது பதிவின் பின்னர் குறித்த பதிவுகள் வைரலாகுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான பதிவுகள் எனது நம்பிக்கை மட்டத்தை குறைப்பதற்காக பதிவிடப்படுகின்றன. ஆனால், அவை என்னை பாதிக்காது. எனினும், இவற்றை நான் கூறுவதற்கான காரணம், இந்த சிறுபிள்ளை தனமான விளையாட்டை நீங்கள்தான் (ஏஷ்லி டி சில்வா) முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

நாம் உலகக் கிண்ண தொடருக்கான விளிம்பில் உள்ளோம். தற்போது எமது நோக்கம் உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால், நாம் இப்போது அர்த்தமற்ற விடயங்களுக்காக சமுகவலைத்தளங்களில் முரண்பட்டுக்கொண்டு உள்ளோம். அணியென்ற ரீதியில் எமக்கு நிலையான தலைமைத்துவம் ஒன்று வேண்டும். முக்கியமாக அணியின் உடைமாற்றும் அறையில் வீரர்களிடத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும். ஆனால், தற்போது சில விடயங்கள் உடைமாற்றும் அறையில் சரியானதாக இல்லை. உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இந்த விடயங்களை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்.

அத்துடன், நாம் அணியென்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கு அணித் தலைமையும், அனுபவ வீரர்களும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.