சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 366 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. அத்துடன், இலங்கை அணிக்கு எதிராக ஓட்டங்களின் அடிப்படையில் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியினையும் இன்று பதிவு செய்துள்ளது.
இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று
போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 534/4d ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி 215 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது. இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 196/3d ஓட்டங்களை பெற்று, இலங்கை அணிக்கு 516 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. மிகப்பெரிய வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு இன்று ஆட்டத்தை ஆரம்பித்தது.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வழமைப் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்திருந்த திமுத் கருணாரத்ன 8 ஓட்டங்களுடன் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.
இவர்களின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து லஹிரு திரிமான்னே மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைந்து 30 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், திரிமான்னே பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில், அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து நிரோஷன் டிக்வெல்ல வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்த நிலையில், மதிய போசன இடைவேளைக்கு 10 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, குசல் பெரேரா களமிறங்கிய முதல் பந்திலேயே விக்கெட்டை விட்டுக்கொடுத்தார்.
தலை உபாதை பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ள குசல் பெரேரா
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை
அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, மதிய போசன இடைவேளையின் போது இலங்கை அணி 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ச்சியாக மதிய போசன இடைவேளைக்கு பின்னரும் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்படி, மதிய போசன இடை வேளையின் பின்னர் தனன்ஜய டி சில்வா 6 ஓட்டங்களுடன் ஜெய் ரிச்சட்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
தனன்ஜய டி சில்வாவின் ஆட்டமிழப்பின் பின்னர் சாமிக கருணாரத்னவுடன், குசல் மெண்டிஸ் இணைப்பாட்டமொன்றினை கட்டியெழுப்பினார். இவர்கள் இருவரும் 46 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், குசல் மெண்டிஸ் 42 ஓட்டங்களுடன் மெர்னஸ் லெபுச்செங்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சாமிக கருணாரத்னவும் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வருகைத் தந்த துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி 149 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 366 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் ஆரம்பத்தை பொருத்தவரை, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ட்ராவிஷ் ஹெட், குர்டிஸ் பெட்டர்சன் மற்றும் ஜோ பேர்ன்ஸ் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 434/4 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜோ பேர்ன்ஸ் 172 ஓட்டங்கள், ட்ராவிஷ் ஹெட் 161 ஓட்டங்கள் மற்றும் குர்டிஸ் பெட்டர்சன் 114 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Photo Album : Sri Lanka Vs Australia 2nd Test – Day 4
தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி வெறும் 215 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்னே 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 196/3d ஓட்டங்களை பெற்று, ஆட்டத்தை இடைநிறுத்தியது. உஸ்மான் கவாஜா 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் தொடர்ந்தும் விளையாட முடியும் – திமுத் கருணாரத்ன
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பெளன்சர் பந்து ஒன்றினால் மிகப்பெரிய உபாதை
இறுதியாக களமிறங்கிய இலங்கை அணி மீண்டும் தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் அடிப்படையில் 366 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்த 366 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றி என்பது, இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி ஓட்டங்கள் அடிப்படையில் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2004ம் ஆண்டு காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமையே, அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்











