இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A, அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகள்

65

அயர்லாந்து A அணியும், 19 வயதுக்கு உட்பட்ட அவுஸ்திரேலிய அணியும் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு விளையாடவுள்ளன.

இதன்படி, இவ்விரு அணிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், அயர்லாந்து A அணி எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியுடன் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, அயர்லாந்து A அணி, இலங்கை A அணியுடன் 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதலாவாது போட்டி எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி கட்டுநாயக்கவிலும், 2 ஆவது போட்டி எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி அம்பாந்தோட்டையிலும் நடைபெறவுள்ளன.

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை உத்தேச அணி

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி ஆரம்பமாகும். இதில் முதலிரண்டு ஒரு நாள் போட்டிகளும், ஜனவரி 19, 21 ஆம் திகதிகளில் அம்பாந்தேட்டையிலும், 3 ஆவது, 4 ஆவது ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 24, 26 ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்திலும், கடைசியும், இறுதியுமான ஒரு நாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, இலங்கைக்கு முதல் தடவையாக சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A அணியின் தலைவராக 18 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், சுழல் பந்துவீச்சாளருமான ஹெரி டெக்டர் செயற்படவுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் கழகமொன்றுக்காக விளையாடி வருகின்ற அவர், இவ்வருடத்தில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து A மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு எதிராகவும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, 19 வயதுக்கு உட்பட்ட அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கும், இலங்கை இளையோர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதியும், 2 ஆவது போட்டி 5 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 7 ஆம் திகதியும் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 நாட்கள் கொண்ட போட்டி ஜனவரி 10 ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<