கராச்சி மைதானத்தை சாடும் ஐக்கிய அரபு இராச்சிய வீரர்கள்

291

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்த ஐக்கிய அரபு இராச்சிய வளர்ந்து வரும் அணி வீரர்கள் கராச்சி மைதானம் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது குழு….

ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதை அடுத்தே வீரர்கள் டுவிட்டர் மூலம் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்துள்ளனர். எனினும், அந்த டுவிட்டர் பதிவுகள் பின்னர் நீக்கப்பட்டிருந்ததோடு அது குறித்து கருத்து வெளியிட அணி முகாமையாளர் மறுத்துள்ளார்.  

கராச்சியில் உள்ள சௌதெண்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் ஹொங்கொங் அணியை ஐக்கிய அரபு இராச்சியம் 31 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 87 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி இருந்தபோது சுமார் அரைமணி நேரம் மழையால் போட்டி தடைப்பட்டது.   

எனினும், மழையின்போது ஆடுகளத்தை மறைப்பதற்கு பொருத்தமான போர்வை ஒன்று இல்லாததால் நீர் ஆடுகளத்திற்குள் கசிந்திருந்தது. மைதானத்தில் இருந்து நீர் தன்மையை நீக்குவதற்கு பல மணி நேரம் மைதான பராமரிப்பாளர்கள் போராடியபோதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்துகொண்டன.

நியுசிலாந்து மண்ணில் பிரகாசித்த குசல் மெண்டில்

நியுசிலாந்து பதினொருவர் மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்று….

கராச்சியில் உள்ள சௌதெண்ட் அரங்கில் 1993ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டபோதும், தற்போது அது முதல்தர அந்தஸ்தை பெற்ற மைதானமல்ல. அங்கு பொழுதுபோக்கு கிரிக்கெட், பயிற்சிப் போட்டிகள் அல்லது பெண்கள் கிரிக்கெட் போட்டிகளே நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான ஒரு நிலையில், நேற்றைய குறித்த போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றி பெற்றிருந்தால், அவ்வணிக்கு தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி இருக்க முடியும்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சிய அணித் தலைவர் ரொஹான் முஸ்தபா, டுவிட்டரில் நேரடியாக சாடியுள்ளார். ‘தொடரில் இவ்வாறு வெளியேறும் வேதனையை ஏற்பாட்டாளர்கள் தெரிந்திருக்க மாட்டார்கள்… நான் இதனைக் கூற வேதனைப்படுகிறேன், மோசமான மைதான வசதியால் நாம் வெளியேறினோம்’ என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.  

Photos: Sri Lanka vs Oman – ACC Emerging Asia Cup 2018

ThePapare.com | Waruna Lakmal | 07/12/2018 Editing and re-using images without….

லாஹூரில் பிறந்த ஐக்கிய அரபு இராச்சிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ரமீஸ் ஷஹ்சாத் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது, ‘பாதுகாப்பு விவகாரம் ஒருபக்கம் இருக்க உலகின் இந்தப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் ஆடப்படாததற்கு மேலும் காரணங்கள் உள்ளன.’

இதனை ஏமாற்றமான தினம் என்று ஐக்கிய அரபு இராச்சிய பயிற்சியாளர் டொக்கி பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தான் B குழு போட்டிகள் அனைத்தையும் நடத்தியது. இந்தக் குழுவில் பாகிஸ்தானுடன் பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றிருந்தன.

இதில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் அணிகள் இடம்பெற்ற A குழு போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெறும் தொடரின் அரையிறுதி போட்டிகள் மற்றும டிசம்பர் 15 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியும் இலங்கையிலேயே நடைபெறவுள்ளன.    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<