அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

Australia tour of Sri Lanka 2022

796
 

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 18  பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I  தொடர் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்தநிலையில் போட்டித்தொடருக்காக ஏற்கனவே முதற்கட்ட குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி குழாத்தை இன்றைய தினம் (01) இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் கொவிட்-19

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் புதுமுக வீரரான லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பதிரண இணைக்கப்பட்டுள்ளார். இவர் IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

இவருடன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடி உபாதை காரணமாக வெளியேற்றப்பட்ட மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவான் துஷாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், இங்கிலாந்தில் நடைபெற்ற வளர்ந்துவரும் அணிக்கான தொடரில் சதமடித்து பிரகாசித்திருந்த துடுப்பாட்ட வீரர் நுவனிந்து பெர்னாண்டோ, சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோரும் குழாத்தில் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளனர்.

உடற்தகுதி காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த பானுக ராஜபக்ஷ மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், உபாதைக்கு முகங்கொடுத்திருந்த பெதும் நிஸ்ஸங்க, அனுப சுழல் பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியிருந்த கசுன் ராஜித ஆகியோரும் T20I தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை T20I அணியின் தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளதுடன், தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தொடர்ந்தும் தங்களுடைய T20I குழாத்துக்கான இடத்தை தக்கவைத்துள்ளனர்.

இதேவேளை இந்திய அணிக்கு எதிரான T20I தொடரில் இடம்பெற்றிருந்த பினுர பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் தினேஷ் சந்திமால், கமில் மிஷார, ஜனித் லியனகே மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் அணியிலிருந்து வாய்ப்பை இழந்துள்ளனர். இதில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் மேலதிக வீரர்களாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை T20I குழாம்

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு மதுசங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, நுவான் துஷார, மதீஷ பதிரண, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, லக்ஷான் சந்தகன்

  • மேலதிக வீரர்கள் – நிரோஷன் டிக்வெல்ல, ஜெப்ரி வெண்டர்சே

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<