அவுஸ்ரேலியாவின் இலங்கை சுற்றுத்தொடர் 2016

276
Aussies depart for world No.1 defence

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை பயணமாகியுள்ளது.

சுமார் மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது.

இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகலேவில் எதிர்வரும் 26ம் திகதி தொடங்குகிறது. அதே போல் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 21ம் திகதியும், டி20 தொடர் செப்டெம்பர் 1ம் திகதியும் ஆரம்பமாகிறது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட எஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்த நிலையில் சொந்த மண்ணில் வலுவான அணியான அவுஸ்திரேலியாவுடன் நடக்கும் இந்த தொடர் இளம் இலங்கை அணிக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும் விதமாக அமையும்.

இத்தொடரில் இலங்கையின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் மற்றும் சகலதுறை வீரர் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் பெரும்பாலும் அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அனுபவம் மிகுந்த இடதுகை துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க தெரிவு செய்யப்பட்டால் அவர் தொடர்ந்தும் 6ஆம் இலக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்