ஊடக உரிமத்திற்கான மனுக்களை கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

189

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இலங்கை கிரிக்கெட் அணியின் ஊடக உரிமத்துக்கான சர்வதேச அரங்கில் இருந்து மனுக்களை கோரவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு வரலாற்று வெற்றி

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டிகளை 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடக்கம் 2027ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையில் ஒளிபரப்புச் செய்வதற்கான ஊடக உரிம மனுக்களே சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து கோரப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் நிறுவனங்கள் இலங்கையின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான மனுக்களை வழங்குவதில் அதிகம் போட்டியிடுவதாக Cricbuzz இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய சர்வதேச ஊடக உரிமத்தினை தக்க வைத்திருக்கும் Sony நிறுவனமும், Star Sports நிறுவனமும் அதிக போட்டியிடும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, இந்தியாவினைச் சேர்ந்த FanCode மற்றும் Viacom 18  நிறுவனங்களும் உரிமத்தினை பெறுவதற்கு ஆர்வம் காட்டியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

WATCH – நியூசிலாந்து தொடரில் இலங்கை அணியின் இலக்கு என்ன? கூறும் திமுத்!

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக உரிமத்திற்கான மதிப்பு சுமார் 25 மில்லியன் டொலர்கள் வரை என மதிப்பிடப்பட்டிருப்பதோடு, இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டிகளை இலக்காக வைத்திருப்பதன் காரணமாக இந்த மதிப்பில் மாற்றம் ஏற்படலாம் என நம்பப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<