இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையாளராகும் AstroPay நிறுவனம்

202

ஐக்கிய இராச்சியம், லத்தின் அமெரிக்கா ஆகியவற்றை மையமாக கொண்டு இயங்கும் கட்டணத் தீர்வு (Payment Solution) நிறுவனமான AstroPay ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான அனுசரணையாளராக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

புயலினால் தாமதமான இலங்கை கிரிக்கெட் அணியின் ஓமான் பயணம்

கால்பந்து அணிகளின் முன்னணி அனுசரணையாளராக திகழும் AstroPay நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கியே, முதன் முறையாக கிரிக்கெட் அணியொன்றுக்கு அனுசரணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் AstroPay நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் (SLC) மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு அமைய, அந்த நிறுவனத்தின் இலட்சினையானது இலங்கை கிரிக்கெட் அணியின் ஜேர்சியிலும் (Jersey), பயிற்சி ஜேர்சியிலும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மறுமுனையில், AstroPay நிறுவனத்தின் வர்த்தக இலட்சினை இலங்கை கிரிக்கெட் அணியின் இணையதளத்திலும், அதன் சமூக வலைதள கணக்குகளிலும் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணிக்கு அனுசரணையாளர்களாக மாறியிருக்கும் விடயம் குறித்து தெரிவித்திருக்கும் AstroPay நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான Mikael Lijtenstein கால்பந்தினை அடுத்து சர்வதேச கிரிக்கெட் அணியொன்றுக்கு அனுசரணை வழங்கியதில் மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.

2014இல் இந்திய பினிஸர்களை தாக்கிய “வைட் யோர்க்கர்கள்”

மறுமுனையில் புதிய அனுசரணையாளர்கள் இலங்கை கிரிக்கெட்டுடன் T20 உலகக் கிண்ணத்திற்காக கைகோர்த்திருப்பது, மகிழ்ச்சி தரும் விடயமாக அமைகின்றது என இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டிருக்கின்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<