U19 ஆசியக்கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

45

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 2024ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை இன்று நேபாளத்தை 55 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.

>>முதல் டெஸ்டில் வியான் மல்டரினை இழக்கும் தென்னாபிரிக்க அணி

நேபாளம் – இலங்கை அணிகள் இடையிலான போட்டி குழு B மோதலாக ஷார்ஜாவில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நேபாள வீரர்கள் இலங்கையை முதலில் துடுப்பாடப் பணித்தனர். போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்கள் பெற்றனர்.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக சாருஜன் சண்முகநாதன் அரைச்சதம் தாண்டி 62 ஓட்டங்கள் எடுக்க, லக்வின் அபேய்சிங்க 50 ஓட்டங்கள் பெற்றார்.

நேபாள பந்துவீச்சில் சன்தோஸ் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், யுவ்ராஜ் கத்ரி 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 234 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நேபாள வீரர்கள் 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டும் எடுத்தனர்.

நேபாள அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மயன் யாதவ் 62 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை பந்துவீச்சில் பிரவீன் மனீஷ 3 விக்கெட்டுக்களையும் யாழ். வீரர்களான ரஞ்சித் குமார் நியூட்டன் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.

இலங்கை அணி இப்போட்டியோடு 19 வயதின்கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளதோடு தமது அடுத்த மோதலில் ஆப்கானை ஞாயிறு (01) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

 

இலங்கை U19 – 233 (50) சாருஜன் 62, லக்வின் அபேய்சிங்க 50, சந்தோஷ் யாதவ் 45/4, யுவ்ராஜ் கத்ரி 44/2

 

நேபாளம் U19 – 178 (46.2) மயன் யாதவ் 62, பிரவீன் மனீஷ 30/3, நியூட்டன் ரஞ்சித்குமார் 17/2, குகதாஸ் மாதுளன் 21/2, விஹாஸ் தேவ்மிக்க 51/2

 

முடிவு இலங்கை U19 55 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<