சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் லஹிரு திரிமான்ன!

Sri Lanka Cricket

276
Lahiru Thirimanne

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த முன்னணி வீரர் லஹிரு திரிமான்ன சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

லஹிரு திரிமான்ன கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதியாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்ததுடன், ஒருநாள் போட்டியில் 2019ம் ஆண்டும், T20I போட்டியில் 2016ம் ஆண்டும் விளையாடியிருந்தார். 

>> குழந்தைகளின் உயிர் காப்பிற்காக கைகொடுக்கும் LPL தொட

தொடர்ச்சியாக அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்காத நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு தொடர்பில் சமுகவலைத்தளங்களில் பதிவுசெய்துள்ள இவர், 

கடந்த ஆண்டுகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதை நான் பெருமையாக கருதுகிறேன். கிரிக்கெட் எனக்கு பலவற்றை கொடுத்துள்ளது. அதேநேரம் மாறுபட்ட உணர்ச்சிகளையும் கொடுத்துள்ளதுஎனவே நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடி அமுலுக்கு வரும் வகையில் ஓய்வை அறிவிக்கிறேன். 

வீரர் என்ற ரீதியில் என்னுடைய முழுமையான பங்களிப்பை கொடுத்துள்ளேன். என்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன். நான் மதிக்கும் கிரிக்கெட்டை நேர்மையாகவும், நெறிமுறையாகவும் தாய்நாட்டுக்காக விளையாடியுள்ளேன். இதுவொரு கடினமான முடிவு. நான் இந்த முடிவை விரும்பி அல்லது விரும்பாமல் எடுத்ததற்கு இங்கு கூற முடியாத பல காரணங்கள் உள்ளன 

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள், பயிற்றுவிப்பாளர்கள், சக வீரர்கள், உடற்கூறு நிபுனர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் போன்றவர்களுக்கும், முக்கியமாக ரசிகர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கடந்த காலங்களில் ஆதரவுகளை வழங்கியிருந்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்துக்கு பின்நின்று ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என பதிவிட்டுள்ளார். 

லஹிரு திரிமான்ன இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 10 அரைச்சதங்கள் அடங்கலாக 2088 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 127 ஒருநாள் போட்டிகளில் 4 சதம் மற்றும் 21 அரைச்சதங்கள் என 3194 ஓட்டங்களையும், 26 T20i போட்டிகளில் 291 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<