கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை 3-0 என்ற நேர் செட்கள் கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

அரையிறுதியில் ஈராக்கிடம் போராடி தோற்றது இலங்கை

ஆசிய சவால் கிண்ணக் கரப்பந்தாட்டத் தொடரில், தொடர்ந்து தமது திறமைகளை…

எட்டு அணிகள் போட்டியிட்டிருந்த இந்தத் தொடரில் இலங்கை அணி முதல் சுற்றில் ஹொங்கொங் மற்றும் மலேசிய அணிகளை வெற்றி கொண்டு, சவுதி அரேபியாவுடன் தோல்வியடைந்த போதும் காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தது. பின்னர் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை 3-0 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றிருந்தது.

எனினும் நேற்று (20) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பலமான ஈராக் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 1-3 என்ற செட்கள் அடிப்படையில் போராடி தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்திருந்தது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை இலங்கை எதிர்கொண்டது. போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணி வெற்றியினை நெருங்குவதற்கான எவ்வித வாய்ப்புகளையும் வழங்கவில்லை.

முதல் செட்டிலிருந்து தங்களது முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை ஆடவர் அணி, முதலாவது செட்டின் முதல் இடைவேளையில், 8-5 என்ற புள்ளிகளுடன் முன்னிலைப்பெற்றது. குறித்த செட்டில் தொடர்ந்தும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை 25-16 என்ற 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Photos: Saudi Arabia v Bangladesh | 1st Asian Men’s Volleyball Challenge Cup 2018

ThePapare.com | Hiran Weerakkody | 21/09/2018 Editing and re-using images without..

பின்னர், போட்டியில் 1-0 என்ற முன்னிலையுடன் இரண்டாவது செட்டை எதிர்கொண்ட இலங்கை அணி, மீண்டும் தங்களது பலத்தை நிரூபித்தது.  பங்களாதேஷ் அணியின் முழுமையான நம்பிக்கையை இழக்கச் செய்து 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டில் வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இலங்கை அணியின் போட்டி வெற்றியை தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டில் 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்ட இலங்கை ஆடவர், அணி  ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

இலங்கை ஆடவர் அணி இம்முறை நடைபெற்ற ஆசிய சவால் கிண்ணத் தொடரில் மொத்தமாக ஆறு போட்டிகளில் விளையாடியிருந்தது. இதில் 2 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்த இலங்கை அணி மூன்றாவது இடத்துடன் தொடரை நிறைவுசெய்துள்ளது.

இந்த தொடரில் போட்டியிட்ட இலங்கை அணி எந்தவொரு போட்டியிலும் 3-0 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடையவில்லை. சவூதி அரேபியா மற்றும் ஈராக் அணிகளிடம் இலங்கை தோல்வியுற்றிருந்த போதும், குறித்த போட்டிகளில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஒரு செட்டையேனும் கைப்பற்றியிருந்தது.

இதேபோன்று, அண்மையில் இந்தோனேசியாவில் நிறைவுற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை ஆடவர் கரப்பந்தாட்ட அணி எந்தவொரு போட்டியிலும் 3-0 என தோல்வியுற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<