கொரோனா பீதி: ஆசிய பதினொருவர் – உலக பதினொருவர் போட்டி ஒத்திவைப்பு!

72
POSTPONED
POSTPONED

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்களாதேஷில் நடைபெறவிருந்த ஆசிய பதினொருவர் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக முழு விளையாட்டு உலகமும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் பல முக்கிய போட்டித் தொடர்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பபட்டும், இரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

பங்களாதேஷின் மறைந்த அரசியல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் உலக பதினொருவர், ஆசிய பதினொருவர் அணிகள் மோதும் விசேட டி20 போட்டியை அந்நாட்டு கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்தது

இந்த போட்டிகளில் ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், இரண்டு இலங்கை வீரர்கள் ஆசிய பதினொருவர் அணி சார்பில் பங்கேற்பதாக இருந்தது.

எனினும், தற்போது குறித்த போட்டித் தொடரை கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது

அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க வருவார்களா மாட்டார்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் போட்டிகளை ஒத்திவைத்திருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எனவே, நாங்களும் எங்களது போட்டிகளை தள்ளி வைத்துள்ளோம். ஒரு மாதம் கழித்து நிலையை ஆய்வு செய்து பின்னர் முடிவெடுப்போம். தற்போதைக்கு இப்போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றது” என தெரிவித்தார்.

செல்பி, ஆட்டோகிராப் வழங்க மறுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், ஐ.சி.சி. உலக.

இதுஇவ்வாறிருக்க, சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐ.சி.சி தலைமை நிர்வாகிகளின் நான்கு நாட்கள் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக .பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, இம்முறை .பி.எல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைவைப்பதா? என்பது குறித்து எதிர்வரும் 14ஆம் திகதி பி.சி.சி.. தனது இறுதி முடிவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதான், கைபின் அதிரடியோடு இந்திய லெஜன்ட்ஸ் அணி வெற்றி

வீதி பாதுகாப்பு பற்றி அவதானம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்

இதுஇவ்வாறிருக்க, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் .பி.எல் தொடரில் பங்கேற்க ஏப்ரல் 15 வரை தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கு வர வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் இன்று (12) நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை மத்திய அரசு இரத்து செய்துள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

ஏற்கனவே, உலகம் முழுவதும் பல முக்கிய போட்டித் தொடர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளில் கால்பந்துப் போட்டிகளையே உள்ளக அரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க