ஈவா கிண்ண வலைப்பந்தாட்டத்தில் ஏழு அணிகளுக்கு சம்பியன் பட்டங்கள்

363

ஈவா கிண்ண பகிரங்க வலைப்பந்தாட்டத் தொடரில் (‘Eva’ All Island Open Netball Tournament ) இலங்கை இராணுவ அணி, பிரிவிற்கான சம்பியனாகவும், குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடம் 19 வயதுக்குட்பட்ட பிரிவின் சம்பியனாகவும் தெரிவாகியுள்ளன. அதிகமான குருநாகல் அணிகளே ஏனைய பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ன.

மேல் மாகாண வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் 13ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஈவா கிண்ண பகிரங்க வலைப்பந்தாட்டத் தொடர் கொழும்பில் உள்ள விமானப்படை விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.  

‘ஈவா’ அகில இலங்கை வலைப்பந்து தொடர் ஜூன் 30இல் ஆரம்பம்

மேல் மாகாண கூடைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பட்டில்..

இம்முறை போட்டிகளில் பாடசாலைகள் மற்றும் விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த சுமார் 145 அணிகள் பங்கேற்றிருந்தன. அத்துடன், பிரிவு, பி பிரிவு, பாடசாலை பிரிவு மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் பிரிவு ஆட்டங்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கான திறந்த போட்டியாகவும், பி பிரிவு ஆட்டங்கள் மகளிருக்கான திறந்த போட்டியாகவும் இடம்பெற்றிருந்தமை முக்கிய அம்சமாகும்.

இந்த நிலையில், பாடசாலைகளுக்கிடையிலான மாணவர்களுக்கான போட்டிகள் மூன்று துணைப் பிரிவுகளாக நடைபெற்றன. அதில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி சம்பியனானது.

17 வயதுக்குட்பட்ட பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய அணி சம்பியனாக, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியனாகத் தெரிவாகியது.

பிரிவு (ஆண்கள்)

பிரிவில் ஆண்களுக்காக நடைபெற்ற மெல்கம் அன்ட்ரூ ஞாபகார்த்த கிண்ணத்தை இலங்கை பொலிஸ் அணி பெற்றுக் கொண்டது. குறித்த போட்டியில் நெட் பயர் விளையாட்டுக் கழகத்தை 14-9 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் அணி வெற்றி கொண்டது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கூடைப்பந்து தொடரின் சம்பியனாக யாழ். வேம்படி மகளிர்

15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு…

இதில், கடந்த வருடம் சம்பியன் பட்டத்தை வென்ற யுனைடட் விளையாட்டுக் கழகத்தை 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்ட நெட் பயர் அணியும், அநுராதபுரம் சமகி விளையாட்டுக் கழகத்தை 27-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய பொலிஸ் அணியும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெட் பயர் விளையாட்டுக் கழகத்தின் பிரசன்ன அலோஷியஸ் குறித்த பிரிவில் சிறந்த வீரருக்கான விருதையும், பொலிஸ் அணியின் பண்டார சமரகோன் வலைப்பந்தாட்ட ராஜாவாகவும் முடிசூடினர்.

பிரிவு (பெண்கள்)

ஈவா சவால் கிண்ணத்திற்காக நடைபெற்ற பெண்களுக்கான பிரிவு போட்டியில் எக்ஸ்போ லங்கா அணியும், இலங்கை இராணுவ அணியும் மோதின.  

அப்போட்டியில் 72-58 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற இராணுவ அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

எக்ஸ்போ லங்கா அணியின் ஷெரின் நுகேரா சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் செல்ல, இலங்கை இராணுவத்தின் தாருகா அஷ்வினி, வலைப்பந்தாட்ட ராணியாக தெரிவானார்.

பி பிரிவு (பெண்கள்)

உல்ரிகா பெர்னாண்டோ பார்குமாரகுலசிங்கம் ஞாபகார்த்த கிண்ணத்திற்காக நடைபெற்ற இப்போட்டியில் கெம்பல் பார்க் விளையாட்டுக் கழகத்தை 16-11 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நெட் பயர் ( Net Fire SC ) விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.

இந்தப் போட்டிப் பிரிவின் சிறந்த வீராங்கனைக்கான விருதை நெட் பயர் விளையாட்டுக் கழகத்தின் மல்கி தில்ஹானி பெற்றுக்கொண்டார்.

40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (பெண்கள்)

மேல் மாகாண சவால் கிண்ணத்திற்காக நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்ட வயதுப் பிரிவில் ஸ்பீட் பேர்ட்ஸ் (Speed Birds) விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.  

குறித்த போட்டியில் பன்தாஸ் விளையாட்டுக் கழகத்தை 14-03 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்பீட் பேர்ட்ஸ் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தப் பிரிவில் ஸ்பீட் பேர்ட்ஸ் அணியின் சம்பா பெரேரா சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார்.

15 வயதுக்குட்பட்ட பிரிவு

குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடத்தை 14-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்ட கொழும்பு மியூசியஸ் கல்லூரி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து சம்பியன் பட்டத்தை வென்றது.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் கிரில்லிவெல மத்திய கல்லூரி அணியை 15-03 என்ற புள்ளிகள் கணக்கில் குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடமும், கண்டி மகளிர் உயர்நிலைக் கல்லூரி அணியை 08-05 என்ற புள்ளிகள் கணக்கில் மியூசியஸ் கல்லூரி அணியும் வெற்றிகொண்டன.

குறித்த வயதுப் பிரிவில் மியூசியஸ் கல்லூரியின் நெத்தங்கி குணரத்ன சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

IAAF உலக சம்பியன்ஷிப் போட்டியில் பாரமி தேசிய சாதனை

இலங்கையின் இரு கனிஷ்ட தடகள வீராங்கனைகளான…

17 வயதுக்குட்பட்ட பிரிவு

இந்தப் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.  இதன் இறுதிப் போட்டியில் குருநாகல் வீராங்கனைகள் கோதமி மகளிர் கல்லூரி அணியை 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினர்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் கண்டி ஹில்வுட் கல்லூரி அணியை, கோதமி கல்லூரி அணி வெற்றி கொண்டதுடன், குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடத்தை மலியதேவ மகளிர் கல்லூரி அணி வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வயதுப் பிரிவில் மலியதேவ மகளிர் கல்லூரியின் சஜினி யாப்பா சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

19 வயதுக்குட்பட்ட பிரிவு

இந்தப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடமும், கம்பஹா திருச்சிலுவை கல்லூரி அணியும் மோதிக் கொண்டன.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியிருந்த குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடம் 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

இந்தப் போட்டிப் பிரிவில் குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் பபசரா தென்னகோன் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<