இலங்கை கிரிக்கட் புதிய தெரிவுக்குழு நியமனம்

690
Aravinda De Silva

இலங்கை கிரிக்கட் அணியின் சமீபத்திய நியுசிலாந்து, இந்தியா மற்றும் டி20 ஆசியக் கிண்ணம் என்பவற்றை  மேற்கோள்காட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த புதிய தெரிவுக்குழுவின் தலைவராக இலங்கையின் முன்னால் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மற்றும் தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக் குழு அங்கத்தவர்கள் பின்வருமாறு

  1. அரவிந்த டி சில்வா – தலைவர்
  2. குமார் சங்கக்காரா – உறுப்பினர்
  3. ரொமேஷ் கலுவிதாரன – உறுப்பினர்
  4. லலித் கலுபெரும – உறுப்பினர்
  5. ரஞ்சித் மதுரசிங்க – உறுப்பினர்