உலகக் கிண்ண இந்திய அணியில் இணையும் 3 காத்திருப்பு வீரர்கள்

320
ESPN Cricinfo
 

ரிஷாப் பண்ட், அம்பத்தி ராயுடு மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியின் காத்திருப்பு (standby) வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

கிரிக்கெட் உலகக் கிண்ணத் …..

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகின்ற ஒவ்வொரு அணிகளினதும் கனவாக காணப்படுவது, தாம் ஒருநாள் உலகக் கிண்ண சம்பியனாக உருவாக வேண்டுமென்பதே. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அதன் அந்தஸ்தை பெற்றுக்கொண்ட அணிகளுக்கிடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தப்படும் .சி.சி உலகக் கிண்ண போட்டித்தொடரின் 12ஆவது பருவகாலத்திற்கான போட்டி இவ்வாண்டு (2019) நடைபெறவுள்ளது. அதிலும் குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு இன்றுடன் 42 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

இது இவ்வாறு இருக்க குறித்த தொடரில் பற்கேற்பதற்கான அணிகளின் குழாம் இம்மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அவரச அவசரமாக ஒவ்வொரு அணிகளும் தங்களது குழாமினை அறிவித்து வருகின்றன.

அதன் அடிப்படையில் குறித்த தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் 15 பேர் அடங்கிய குழாம் கடந்த திங்கட்கிழமை (15) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவானது மிகவும் உண்ணிப்பாக குழாமினை தேர்வு செய்திருந்தது.

இதில் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் விளையாடியிருந்த எம் எஸ் டோனி, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, விராட் கோஹ்லி, புவனேஷ்வர் குமார், முஹம்மட் சமி மற்றும் ரோஹிட் சர்மா ஆகிய 7 முக்கிய வீரர்களுக்கு 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கு உலகக் கிண்ண தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் பாரிய சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.  

தினேஷ் கார்த்திக்கு குழாமில் இடம்பெறுவார் என யாரும் பெரிதாக எதிர்பாக்கவில்லை. மற்றுமொரு இளம் விக்கெட் காப்பாளரான ரிஷாப் பண்ட் அணியில் இடம்பெறுவார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கார்த்திக் குழாமில் இடம்பிடித்தார். ரிஷாப் பண்டிற்கு ஆதரவாக பிரபல கிரிக்கெட் விமர்சகர் சுனில் கவாஸ்கர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதேவேளை, துடுப்பாட்ட வீரராகவும் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயற்பட்டு அண்மையில் சர்ச்சைக்குரிய பந்துவீச்சு என்ற அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பந்துவீச தடைக்கு உள்ளாகியிருக்கும் அம்பத்தி ராயிடுவும் குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இடத்திற்கு விஜய் சங்கர் பெயரிடப்பட்டார். எனினும், ராயுடு தவறவிடப்பட்டமைக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌராவ் கங்குலி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு சர்ச்சைகள் கிளம்பி வந்த நிலையில், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது. ‘ரிஷாப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக துடுப்பாடக்கூடிய வீரராக இருந்தாலும் உலகக் கிண்ண தொடரை பொறுத்த வரையில் அனுபவம் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. தினேஷ் கார்த்திக் நல்ல அனுபவம் வாய்ந்த வீரராக காணப்படுகின்றார். அது மாத்திரமல்லாது டோனியை போன்று சிறந்த ஒரு பினிஷராகவும் காணப்படுகின்றார்‘.

விஜய் சங்கரினுடைய தேர்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கருத்து வெளியிடுகையில், ‘அம்பத்தி ராயுடு அண்மைக்காலமாக சிறப்பாக பிரகாசிக்கவில்லை. விஜய் சங்கர் ஒரு 3D பிளேயராக காணப்படுகின்றார். மூன்று துறைகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்றவர். தற்சமயம் மிக சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இதனாலேயே அவரை குழாமில் இணைத்திருக்கின்றோம்‘. என தெரிவித்திருந்தார்.

இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக திமுத் கருனாரத்ன

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் …..

குழாமில் இணைக்கப்படாமையால் ஆத்திரமடைந்த அம்பத்தி ராயுடு தேர்வுக்குழு தலைவரின் கருத்திற்கு கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டரில்உலகக் கிண்ண போட்டியை பார்ப்பதற்காக புதிய 3D கண்ணாடியை ஓடர் செய்துள்ளதாககுறிப்பிட்டிருந்தார். குறித்த கருத்து பாரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இது இவ்வாறு இருக்க இந்திய அணியானது உலகக் கிண்ண தொடரில் தங்களுக்கான மேலதிக வீரர்களாக, அதாவது குறித்த குழாமில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற வீரர்களுக்கு ஏதேனும் உபாதை ஏற்பட்டு அவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்படும் போது அவர்களுக்கு மாற்றீடாக பயன்படுத்துவதற்காக மூன்று வீரர்களை குழாமில் இணைத்துள்ளது.

இதில் பிரதான குழாமில் தவறவிடப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட வீரர்களான ரிஷாப் பண்ட், அம்பத்தி ராயுடு மற்றும் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். குழாமிலிருந்து விலக்கப்பட்டிருந்த இவர்களுக்கு குழாமுடன் இணைவதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாக மாறியிருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<