கொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வோர்னர்

113

கொரோனா வைரஸுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வோர்னர் மொட்டை அடித்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ பதிவையும் சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டார்.

கொரோனா தொற்று: கிரிக்கெட்டுடன் தொடர்புடைய முதல் உயிரிழப்பு

இங்கிலாந்தின் கவுண்ட்டி கிரிக்கெட் கழகமான லங்கஷெயர் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளார் ……..

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 30,000 இற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார்கள்

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் 5000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 19 பேர் மரணமடைந்துள்ளார்கள்.  

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் தனது தலை முடியை மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்

வோர்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டையடித்த வீடியோவை பதிவிட்டு, மக்களுக்காக பணியாற்றுவோருக்கு ஆதரவாக என் தலையை மொட்டையடிக்கப் பரிந்துரைக்கப்பட்டேன். இதோ, என்னுடைய டைம் லாப்ஸ் வீடியோ. என்னுடைய அறிமுகத்தின் போது இதைச் செய்தேன் என்று நினைக்கிறேன். பிடித்திருக்கிறதா, இல்லையா என்று அதற்குத் தலைப்பிட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இதே பாணியில் ஆதரவைத் தெரிவிக்க இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் மொட்டை அடிக்கும்படி வோர்னர் சவால் விடுத்துள்ளார்.   

ஸ்மித்தின் தலைமைப் பதவிக்கான இரண்டு வருட தடைக்காலம் முடிவு

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் தலைவர்

அத்துடன், சக அணி வீரர்களான அடெம் சம்பா, பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோ பெர்னஸ் உள்ளிட்ட வீரர்களுக்கும் அவர் இந்த சவாலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, அவரது சவாலை கோஹ்லி மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக மற்றைய வீரர்களைப் போல வீட்டில் இருக்கும் விராட் கோஹ்லிக்கு மனைவி அனுஷ்கா ஷர்மா புது ஹேயார் ஸ்டைலிஸ்ட்டாக மாறியுள்ளார்.  

விராட் கோஹ்லிக்கு முடிவெட்டுகின்ற வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மா பதிவிட்டுள்ளார்

 

View this post on Instagram

 

Meanwhile, in quarantine.. ??‍♂??‍♀

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

இந்த தனிமைப்படுதல் உங்களுக்கு இதைத்தான் செய்கிறதுஎன்று கோஹ்லி வீடியோவில் கூறும்போது, அனுஷ்கா ஷர்மா பின்னால் இருந்து சிரிக்கிறார்

இது போன்ற விடயங்கள் நடக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். சமையல் அறை கத்திரிகோலால் தலைமுடியை வெட்ட வேண்டியுள்ளது என்று கோஹ்லி கூறுகிறார்

என் மனைவி செய்த அழகான ஹேயார்கட்என்று கோஹ்லி முடிப்பதற்குள் இருவரும் ஹேயார்கட் பற்றி குறித்த வீடியோவில் விவாதிக்கிறார்கள்.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<