முறையற்ற பாணியில் பந்துவீசியதாக சகீப் அல் ஹசன் மீது குற்றச்சாட்டு

59

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹசன் முறையற்ற பாணியில் (Suspect Bowling Action) பந்துவீசினார் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.  

இலங்கை – நியூசிலாந்து தொடர்களுக்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்

சகீப் அல் ஹசன் இங்கிலாந்தின் கவுண்டி சம்பியன்ஷிப் தொடரில் சர்ரேய் அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் விளையாடியிருந்தார். இவர் சர்ரேய் சமர்செட் (Somerset) அணியுடன் டோன்டன் நகரில் வைத்து ஆடிய போட்டியில் 63 ஓவர்களை வீசி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். எனினும் குறித்த போட்டியின் கள நடுவர்கள் இருவரும் சகீப்பின் பந்துவீச்சு தொடர்பில் புகார் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

எனவே இந்த புகாருக்கு அமையவே சகீப் அல் ஹசனினை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (EWCB) பந்துவீச்சு சோதனைக்கு முகம் கொடுக்குமாறு குறிப்பிட்டுள்ளது 

சுமார் 17 வருடங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகின்ற சகீப் அல் ஹசனின் பந்துவீச்சு மீது புகார் ஒன்று எழுப்பப்படுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவர் 447 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 712 விக்கெட்டுக்களைச் சாய்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) அதிகாரிகளில் ஒருவர் இது இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தனிப்பட்ட போட்டிகள் குறித்த முடிவு என்பதோடு இதற்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் அல்லது ஏனைய கிரிக்கெட் சபைகளுக்கும் தொடர்புகள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார் 

எனினும் சகீப் அல் ஹசன் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பந்துவீச்சு சோதனைகளுக்கு முகம் கொடுத்து அதில் நேர்மறையான முடிவுகள் கிடைத்த பின்னரே அவருக்கு குறிப்பிட்ட நாட்டின் உள்ளூர் போட்டிகளில் ஆட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<