தம்மிக்க பிரசாத்திற்கு நன்றி தெரிவித்த சஹீட் அப்ரிடி

1629
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான சஹீட் அப்ரிடி, அவரது தாய் நாடான பாகிஸ்தானிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத்திற்கு நன்றிகளை தெரிவித்திருக்கின்றார்.

T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு யாருக்கு? கூறும் ரசல், தமிம், மஹரூப்

பாகிஸ்தான் அணிக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இரத்துச் செய்ததனை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் கண்காட்சி கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தம்மிக்க பிரசாத் தனது டுவிட்டர் கணக்கு மூலமாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி இந்த விடயத்திற்கு நன்றி கூறியே சஹீட் அப்ரிடி தமது நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை

“பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு ஆதரவு வழங்குவதற்காகவும், உலகில் உள்ள ஏனைய விளையாட்டு அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் வெளியே சென்றிருக்கின்றது. அந்தவகையில், நாம் (பாகிஸ்தான்) ஒரு சிறந்த இதயம் கொண்ட நாடு” என அப்ரிடி கூறியிருந்தார்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையும் சரியான கால இடைவெளி ஒன்று கிடைக்கும் போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமது அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<