இலங்கை வரவுள்ள ஆப்கான் அணிக்கு சென்னையில் பயிற்சி முகாம்

926
Photo Courtesy - ACC official Twitter

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கவுள்ள 36 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியினர், சென்னையில் உள்ள ஸ்ரீ இராமசந்திர தனியார் பயிற்சி மையத்தில் கடந்த ஒரு வார காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற….

இந்த வீரர்களுக்கான பயிற்சிகள், ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் பில் சிம்மென்ஸ் மற்றும் வளர்ந்துவரும் அணியின் பயிற்றுவிப்பாளர் அண்டி மோல்ஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற டி-10 லீக் தொடரில் விளையாடி வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான மெஹமட் ஷேஹ்சாத், ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களும் சென்னையில் இடம்பெறும் பயிற்சி முகாமில் இந்த வாரம் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

  • Photo Courtesy - ACC official Twitter

குறித்த பயிற்சிகளின் பின்னர், ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினர், எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி இலங்கை நோக்கி புறப்பட்டு வரவுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக உதவி செய்யும் நோக்கில் இந்திய கிரிக்கெட் சபையின் பூரண அனுமதியுடன் சென்னையில் உள்ள ஸ்ரீ இராமசந்திர தனியார் பயிற்சி மையத்திற்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் இடையில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இதன் பிரதிபலனாக ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு அங்கு சென்று பயிற்சி முகாம்களில் ஈடுபடவும், உபாதைகளில் இருந்து குணமடைவதற்குமான பயிற்சிகளும் இங்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) சம்பியன்களாக பல்க் லெஜென்ட்ஸ் அணி

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தவிதத்தில் முதன்முறையாக….

இதுஇவ்வாறிருக்க, சுமார் ஒரு மாதகாலம் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி முகாமில், உள்ளூர் அணிகளுடனான பயிற்சிப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளதாக இராமசந்திர தனியார் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் எம். சன்ஜே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வளர்ந்துவரும் வீரர்களுக்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 6ஆம் திகதி 15ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.  

மற்றும் பி என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள இம்முறை போட்டிகளில் பிரிவில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், பி பிரிவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

அத்துடன், இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்திலும், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள போட்டிகள் கராச்சியிலும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, இப்போட்டித் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<