எனது பயிற்றுவிப்புக்காக நான் மன்னிப்பு கோர மாட்டேன் – ஜஸ்டின் லேங்கர்

158

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக தான் கையாண்ட கடுமையான பயிற்சிமுறைக்காக மன்னிப்பு கோர மாட்டேன் என அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் குறிப்பிட்டிருக்கின்றார்.

UAE T20 லீக்கில் IPL அணிகளுக்கு முன்னுரிமை

ஜஸ்டின் லேங்கரின் பயிற்றுவிப்பிலான அவுஸ்திரேலிய அணி கடந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொண்டிருந்ததோடு, அண்மைய ஆஷஸ் தொடரிலும் இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.

எனினும் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஜஸ்டின் லேங்கர் இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். ஜஸ்டின் லேங்கர் பதவி விலகுவதற்கு அவுஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கும் அவருக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் தான் வழங்கிய செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்த லேங்கர், தனது கடுமையான பயிற்றுவிப்பு முறைகள் குறித்து ஒரு போதும் மன்னிப்பு கோரப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

”அவுஸ்திரேலிய அணியுடன் (பயிற்றுவிப்பு பதவியினை) நிறைவு செய்து கொண்ட சந்தர்ப்பத்தில், நான் மிகவும் கடுமையானவன் அத்துடன் இளம் வீரர்களுக்கு அதிக அழுத்தம் பிரயோகிக்கின்றேன் என பேச்சுக்கள் வெளிவந்திருந்தன. ஆனால் அவையே நான் கற்றுக் கொண்டவை”

”இது கிரிக்கெட் என்ற போதும், நாங்கள் போராட்ட களம் ஒன்றுக்கு செல்கின்றோம். இங்கே நாம் எமது நாட்டினை பிரதிநிதித்துவம் செய்கின்றோம், நாங்கள் வெற்றிக்காக வெளியில் செல்வதோடு, நாங்கள் அவுஸ்திரேலியர்களை பெருமைப்பட செய்ய எதிர்பார்க்கின்றோம்.”

”நான் இதற்காக எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். இப்படியான முறையிலேயே நாங்கள் உருவாக்கப்பட்டோம். இவ்வாறு உருவாக்கப்படாது போயிருப்பின் நான் இந்த இடத்தில் இருப்பது சாத்தியமானது இல்லை.” என ஜஸ்டின் லேங்கர் குறிப்பிட்டிருந்தார்.

ஜஸ்டின் லேங்கர் தனது பயிற்றுவிப்பு முறைகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான ஸ்டீவ் வோக், ரிக்கி பொண்டிங், ஆலன் போர்டர் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர் போப் சிம்ப்ஸன் ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்டவை எனத்fo தெரிவிக்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<