கோடிகளை அள்ளிய மகளிர் பிரீமியர் லீக் அணிகள் ; எவ்வளவு தெரியுமா?

Women's Premier league 2023

33

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளின் உரிமையாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்து லையன்ஸ் தொடருக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு

அதன்படி அணி உரிமையாளர்களுக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் நிர்வாகங்கள் WPL தொடருக்கான அணிகளை வாங்கியுள்ளன.

அதன்படி மேற்குறித்த மூன்று அணிகளும் அவர்களுடைய IPL அணிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே நகரங்களை WPL தொடரிலும் தமதாக்கியுள்ளனர்.

இதேநேரம் அதானி குழுமத்துக்கு சொந்தமான அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவட் லிமிடட் அஹமதாபாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றை வாங்கியுள்ளதுடன், கேப்ரி கிளோபல் பிரைவட் லிமிடட் என்ற மற்றுமொரு இந்திய நிறுவனம் லக்னோவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றை வாங்கியுள்ளது.

இதில் அஹமதாபாத் அணியை வாங்கியுள்ள அதானி குழுமம் அதிகபட்ச ஏலத்தொகையாக 1289 கோடியை (இந்திய ரூபாய்) நிர்ணயித்திருந்ததுடன், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 912.99 கோடியை நிர்ணயித்திருந்தது.

இதேவேளை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் 901 கோடியையும், டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்வாகம் 810 கோடிகளையும், கேப்ரி கிளோபல் பிரைவட் லிமிடட் நிறுவனம் 757 கோடிகளையும் நிர்ணயித்திருந்தன.

எனவே மொத்தமாக 4669.99 கோடிக்கு (இந்திய ரூபாய்) WPL லீக் தொடருக்கான அணிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த தொகையானது 2008ம் ஆண்டு IPL தொடருக்கான அணிகள் வாங்கப்பட்ட தொகையை விடவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<