இளையோர் ஆசியக் கிண்ண முதல்நாளில் இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி

131

19 வயதின் கீழ்ப்பட்ட ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கான 2019ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (5) ஆரம்பமாகியது.  

எட்டு நாடுகளின் இளையோர் அணிகள் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் குழு A அணிகள் பங்குபெறும் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன.  

ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான்

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியும் மோதின.

சிறந்த களத்தடுப்பு அணி என்ற பெருமைக்காக இலங்கை இளையோர் அணி

இலங்கையில் இன்று (5) ஆரம்பமாகியிருக்கும் 19…..

இப்போட்டி மழையின் காரணமாக அணிக்கு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது. போட்டியில் எதிரணியினால் பணிக்கப்பட்டு முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

ஆப்கான் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் செடிகுல்லாஹ் ஆடால் 29 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்ய, றஹ்மானுல்லா 27 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இதேநேரம் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பில் ஆமீர் அலி மற்றும் பஹாட் முனீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.  

இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை 46 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி ஆப்கானிஸ்தான் இளம் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 19.4 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் 85 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. 

பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக இர்பான் கான் 19 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்ய ஏனைய வீரர்கள் அனைவரும் மிகவும் குறைவான ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்திருந்தனர். 

இதேநேரம், ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த சபிகுல்லாஹ் காபாரி 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, பசால் ஹக், அபிதுல்லா தனிவால், நூர் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

போட்டியின் ஆட்ட நாயனாக ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின்  சபிகுல்லாஹ் காபாரி தெரிவாகினார். 

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 162/9 (46) செடிகுல்லாஹ் ஆடால் 29, றஹ்மானுல்லா 27, பஹாத் முனீர் 23/3, ஆமீர் அலி 34/3, அப்பாஸ் அப்ரிடி 26/2

பாகிஸ்தான் – 78 (19.4) இர்பான் கான் 19, சபிகுல்லாஹ் காபாரி 15/3, நூர் அஹ்மட் 124/2, பசால் ஹக் 21/2, அபிதுல்லா தனிவால் 21/2 

முடிவு – ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்டபட்ட அணி 85 ஓட்டங்களால் வெற்றி


இந்தியா எதிர் குவைட்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியும், குவைட் 19 வயதுக்கு உட்பட்ட அணியும் மோதிய இப்போட்டி கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் இடம்பெற்றது. 

T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில்…

மழையினால் அணிக்கு 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு இடம்பெற்ற இம்மோதலில் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை குவைட் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய குவைட் 19 வயதுக்கு உட்பட்ட அணி  நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. குவைத் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் துடுப்பாட்டம் சார்பாக மீட் பவ்ஸர் 28 ஓட்டங்களை பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்தார். 

இதேநேரம், இந்தியா சார்பாக ஆகாஷ் சிங்க், புர்னாக் தியாகி ஆகியோர் தலா 3 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 111 ஓட்டங்களை 23 ஓவர்களில் பெறுவதற்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி பதிலுக்கு துடுப்பாடியது. 

வைட்வொஷ் தோல்வியை தடுக்குமா இலங்கை?

இலங்கைக்கு சுற்றுப் பயணம்…

அவ்வணிக்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வந்த அர்ஜூன் அஸாட் அரைச்சதம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். இவரது அரைச்சதத்தோடு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இந்திய துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் பெற்றிருந்த அர்ஜூன் அஸாட் 58 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

குவைட் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக அப்துல் சாதிக், பாயிஸ் குரேஷி மற்றும் ஆமீர் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் சுருக்கம்

குவைட் 110/7 (23) – மீட் பவ்ஸர் 28, ஆகாஷ் சிங்க் 223, புர்னாக் தியாகி 28/3

இந்தியா 114/3 (19.1) அர்ஜூன் அஸாட் 60*, பாயிஸ் குரேஷி 15/1 

முடிவு –  இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<