வருட T20 உலகக் கிண்ணத்தில் விளையாட இருந்த டி. வில்லியர்ஸ் 

177
CORRECTION: NAME SPELLING South Africa cricketer AB de Villiers (L) runs between the wickets with his teammate Quinton de Kock (R) during the second T20 cricket match between Bangladesh and South Africa at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on July 7 , 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடக்கவிருந்த T20i உலகக் கிண்ணத் தொடருக்கு தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஏபி. டி. வில்லியர்ஸின் பெயரை அணியில் சேர்த்து வைத்து இருந்தோம் என்று அந்த அணியின் தலைவர் குயின்டன் டி கொக் தெரிவித்துள்ளார்.

தனது துடுப்பு மட்டை, ஜேர்ஸியை ஏலம் விடும் டு ப்ளெசிஸ்

கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தான் பயன்படுத்திய துடுப்பு மட்டை…

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும்க்டோபர்நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ணத் தொடர் கொவிட் – 19 வைரஸ் காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

ஆனால் கொவிட் – 19 வைரஸ் தாக்கத்திற்கு முன்னதாக இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் மற்றும் T20i உலகக் கிண்ணத் தொடர்களில் மகேந்திர சிங் டோனி, ஏபி. டி. வில்லியர்ஸ், லசித் மாலிங்க உள்ளிட்ட வீரர்கள் விளையாடி தமது திறமையை வெளிப்படுத்துகின்ற சிறந்த வாய்ப்பாக இருந்தது.  

ஏனெனில், இந்த வீரர்களில் டி.வில்லியர்ஸ் மாத்திரம் ஓய்வு பெற்றுவிட்டாலும், டோனி மற்றும் மாலிங்க ஆகிய இருவருமே ஓய்வு கட்டத்தை எட்டி விட்டார்கள்.  

இந்நிலையில் T20i உலகக் கிண்ணத் தொடருக்கு ஏபி. டி. வில்லியர்ஸ் பெயரை தென்னாபிரிக்கா அணியில் சேர்த்து வைத்து இருந்தோம் என்று அந்த அணியின் தலைவர் குயின்டன் டி கொக்  தெரிவித்துள்ளார்

Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124

3 அணிகள், 36 ஓவர்கள், 3TC கிரிக்கெட்டில் அதிவேக அரைச்சதம் அடித்து கிரிக்கெட் இரசிகர்களை…

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் கூறுகையில்

“T20i உலகக் கிண்ணத்தில் விளையாடவிருந்த எமது அணியில் டி வில்லியர்ஸ் பெயரிடப்பட்டு இருந்தார். அவர் உடல் தகுதி நன்றாக இருந்தால் நிச்சயம் அவரை அணியில் சேர்ந்து விளையாட வைத்திருப்பேன்.  

எமது அணி வீரர்களும் அவரை அணியில் வரவேற்க தயாராக இருந்தார்கள். அவரை எப்படியாவது விளையாட வைத்து விட வேண்டுமென்று தயாராகிக் கொண்டிருந்தபோது தான் T20i உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று குயின்டன் டி கொக் கூறியுள்ளார்

ஏபி. டி. வில்லியர்ஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது எப்படியாவது அவரை மீண்டும் தென்னாபிரிக்கா அணிக்கு விளையாட வைத்து விட வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை முயற்சி செய்து வருகிறது

கிரிக்கெட் விளையாட்டில் முகம்சுழிக்க வைக்கும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள்

விளையாட்டுக்கள் மூலம் பொதுவாக மனித விழுமியங்களை வளர்க்கும் சந்தர்ப்பம் ஒன்று…

எதுஎவ்வாறாயினும், கடந்த வார இறுதியில் நடைபெற்ற 3TC கிரிக்கெட் தொடரில் ஈகிள்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட டி. வில்லியர்ஸ், அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்திருந்ததுடன், அந்த அணிக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்கவும் காரணமாக இருந்தார்

எதுஎவ்வாறாயினும், குறித்த போட்டியின் பிறகு பேசி அவர், மீண்டும் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாட ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க