மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பாடநெறிகள் மார்ச் மாதம் ஆரம்பம்

125

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளர்களுக்கான தரம் – 1 இற்கான பாடநெறிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மார்ச் 17 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இப்பாடநெறியில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்கள் தமது விண்ணப்படிவங்களை கொழும்பு 07, டொரின்டன் அவனியூ, இலக்கம் 33 என்ற முகவரியில் அமைந்துள்ள இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் செயலளார் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜோ ரூட்டிடம் மன்னிப்பு கோரிய ஷெனோன் கேப்ரியல்

இதனிடையே, தற்போது பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற ஆனால், மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் பாடநெறியை பூர்த்தி செய்யாதவர்களும், தேசிய மட்டத்தில் வீரர்களை உருவாக்கி தற்போது வீரர்கள் அல்லாமல் பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களுக்கும் இப்பாடநெறியில் முன்னுரிமை கொடுக்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இம்மாதம் 20 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், பாடநெறிக் கட்டணமாக 15 ஆயிரம் ரூபா அறிவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க