FIFAவின் இலங்கை மீதான தடையை நீக்க என்ன செய்ய வேண்டும்?

326
Three conditions to get FIFA ban lifted for Sri Lanka

சர்வதேச கால்பந்து சம்மேளனங்களின் சங்கம் (FIFA) இலங்கை மீது விதித்துள்ள தமது இடைக்கால தடையை நீக்குவதற்கு இலங்கை கால்பந்து சம்மேனம் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கிய நிபந்தனைகளை FIFA கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு என்பன 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் மேற்கொண்ட புதிய சட்ட விதிமுறைகளுக்கு அமைய இலங்கை கால்பந்து சம்மேளனம் செயற்படவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக FIFA குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் FIFAவின் பொதுச் செயலாளர் பத்மா சமூரா, இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ள இந்த தடையை நீக்குவதற்கான நிபந்தனைகளாவன,

1. (2022, செப்டம்பர் 22 அமுல்படுத்தப்பட்ட) சம்மேளனத்தின் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொள்வதாகவும், இலங்கை கால்பந்துக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய தேசிய விளையாட்டு சட்டவிதிகளை இலங்கை கால்பந்தில் உள்வாங்குவதில்லை என்றும் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

2. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான பொதுத் தேர்தலை FIFA மற்றும் AFC ஆகியன ஏற்றுக்கொள்ளாது. எனவே, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவொன்று தெரிவு செய்யப்படும்வரை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகமே (FFSL Administration) அதன் நாளாந்த செயற்பாடுகளை பொறுப்பேற்க வேண்டும்.

3. இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய பொதுத் தேர்தலானது (2022, செப்டம்பர் 22 அமுல்படுத்தப்பட்ட) சம்மேளனத்தின் புதிய சட்ட விதிகளுக்கு அமைய இடம்பெற வேண்டும். குறித்த தேர்தல் இகசிய

வாக்கெடுப்பு மூலம் இருக்க வேண்டும் என்பதுடன் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக காலம் 4 வருடங்களாக இருக்கும்.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<