Home Tamil பவான் ரத்நாயக்கவின் சதம் வீண்; இங்கிலாந்துக்கு முத்தரப்பு தொடரில் ஆறுதல் வெற்றி

பவான் ரத்நாயக்கவின் சதம் வீண்; இங்கிலாந்துக்கு முத்தரப்பு தொடரில் ஆறுதல் வெற்றி

Sri Lanka tour of Pakistan 2026

6

சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியானது இலங்கையை 55 ஓட்டங்களால் வீழ்த்தி இந்த தொடரில் ஆறுதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.   

பாகிஸ்தானுக்கு துடுப்பாட்ட அனர்த்தம் வழங்கி இறுதிப் போட்டியில் இலங்கை

லாஹூரில் இன்று (29) ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டார். இப்போட்டிக்கான இலங்கை வீரர்கள் மாற்றங்களின்றி களமிறங்கினர்.   

இலங்கை அணியானது முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய காரணத்தினால் அழுத்தங்கள் இன்றி, இங்கிலாந்தை எதிர் கொண்ட போதிலும் இங்கிலாந்தின் ஆரம்ப ஜோடியான டொம் பென்டன் – பென் டக்கட் ஆகிய இருவரும் இதனை சாதகமாக பயன்படுத்தி ஓட்டங்கள் குவிக்கத் தொடங்கினர்.  

இரண்டு வீரர்களும் அரைச்சதம் விளாசியதோடு முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 163 ஓட்டங்களைப் பெற்றனர். இங்கிலாந்தின் முதல் விக்கெட்டான டொம் பென்டன் 75 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.  

அதன் பின்னர் இங்கிலாந்து அணியினை பென் டக்கட் சதம் விளாசி பலப்படுத்தியிருந்தார். இவர்களுடன் அணித்தலைவர் ஹர்ரி புரூக் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஜோர்டன் கோக்ஸ் இன் குறுகிய அதிரடியும் கைகொடுக்க இங்கிலாந்து அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 386 ஓட்டங்கள் பெற்றது.  

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் தன்னுடைய 6ஆவது ஒருநாள் சதத்துடன் 24 பௌண்டரிகள் அடங்கலாக 132 பந்துகளில் 167 ஓட்டங்களுடன் அவரின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை பதிவு செய்தார்.  அதேவேளை ஜோர்டன் கோக்ஸ் 27 பந்துகளில் 43 ஓட்டங்களையும், ஹர்ரி புரூக் 44 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களைக் கைபற்றியிருந்தார்.  

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான கடினமிக்க 387 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது.  

அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவராக கமிந்து மெண்டிஸ் 04 ஓட்டங்களில் ஆட்டமிழந்த போதும், ஏனைய ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்னாண்டோ அணித்தலைவர் குசல் மெண்டிஸ் உடன் இணைந்து இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்கள் சேர்த்து  ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது 48 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தவறவிடும் பெதும் நிஸ்ஸங்க

அதனையடுத்து குசல் மெண்டிஸ் அதிரடி கலந்த நிதானத்துடன் அணியை இலக்கை நோக்கி முன்னேற்றினார். எனினும் அவரது விக்கெட் துரதிஷ்டவசமாக ஜோ ரூட்டின் பந்துவீச்சில் பறிபோனது. மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 71 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.  

குசல் மெண்டிஸ் இன் பின்னர் பவன் ரத்நாயக்க அதிரடியாக ஆடி சதம் விளாசிய போதும் இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்டவீரர்களிடம் இருந்து போதிய ஆதரவின்மையினால், இலங்கை 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 331 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.  

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பவன் ரத்நாயக்க தன்னுடைய 03ஆவது சதத்துடன் 77 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்கள் பெற்றார்.  

இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் டாவ்சன் 4 விக்கெட்டுக்களையும், சோன்னி பேக்கர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக பென் டக்கட் தெரிவாகியிருந்தார்.  

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (31) இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம் 

Result
Sri Lanka
331/10 (45.1)
England
386/5 (50)
Batsmen R B 4s 6s SR
Tom Banton  b Dasun Shanaka 74 75 8 2 98.67
Ben Duckett c Asitha Fernando b Eshan Malinga 167 132 24 0 126.52
Harry Brook c Asitha Fernando b Asitha Fernando 44 34 3 2 129.41
Will Jacks b Asitha Fernando 30 21 4 0 142.86
Jordan Cox c Sahan Arachchige b Dilshan Madusanka 43 27 3 1 159.26
Sam Curran not out 21 12 1 1 175.00
Extras 7 (b 1 , lb 0 , nb 1, w 5, pen 0)
Total 386/5 (50 Overs, RR: 7.72)
Bowling O M R W Econ
Asitha Fernando 10 1 63 2 6.30
Dilshan Madusanka 9 0 64 1 7.11
Eshan Malinga 10 0 101 1 10.10
Dunith Wellalage 10 0 75 0 7.50
Sahan Arachchige 2 0 18 0 9.00
Janith Liyanage  2 0 15 0 7.50
Dasun Shanaka 7 0 49 1 7.00

Batsmen R B 4s 6s SR
Kamindu Mendis b Sonny Baker 4 11 1 0 36.36
Avishka Fernando c Will Jacks b Liam Dawson 48 50 8 1 96.00
Kusal Mendis c Jordan Cox b Joe Root 89 71 8 5 125.35
Pavan Rathnayake c Sonny Baker b Liam Dawson 118 77 15 1 153.25
Dasun Shanaka lbw b Liam Dawson 4 11 0 0 36.36
Janith Liyanage  c Harry Brook b Sonny Baker 27 17 1 3 158.82
Sahan Arachchige c Harry Brook b Henry Crocombe 30 24 4 0 125.00
Dunith Wellalage run out (Joe Root) 1 4 0 0 25.00
Eshan Malinga b 1 4 0 0 25.00
Asitha Fernando c Tom Banton  b Liam Dawson 1 3 0 0 33.33
Dilshan Madusanka not out 0 0 0 0 0.00
Extras 8 (b 0 , lb 2 , nb 1, w 5, pen 0)
Total 331/10 (45.1 Overs, RR: 7.33)
Bowling O M R W Econ
Gus Atkinson 9 1 63 0 7.00
Sonny Baker 9 0 75 2 8.33
Sam Curran 7.1 1 44 1 6.20
Liam Dawson 10 0 49 4 4.90
Henry Crocombe 3 0 27 1 9.00
Will Jacks 3 0 36 0 12.00
Joe Root 4 0 35 1 8.75

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<