Home Tamil மூன்றாம் நாளில் முழு ஆதிக்கம் பெற்றுக் கொண்ட நியூசிலாந்து அணி

மூன்றாம் நாளில் முழு ஆதிக்கம் பெற்றுக் கொண்ட நியூசிலாந்து அணி

195

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் நியூசிலாந்து அணியானது டேரைல் மிச்சல், மேட் ஹென்ரி ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களோடும், ப்ளைர் டிக்னரின் அபார வேகப்பந்துவீச்சோடும் வலுப் பெற்றிருக்கின்றது.

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஷோன் மார்ஷ்

கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (10) நிறைவுக்கு வரும் போது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (355) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 162 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த டேரைல் மிச்சல் 40 ஓட்டங்களையும், மைக்கல் பிரஸ்வெல் 09 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று (11) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு பிரபாத் ஜயசூரிய மைக்கல் பிரஸ்வெலின் விக்கெட்டினைக் கைப்பற்றி நெருக்கடி உருவாக்கிய போதும், டேரைல் மிச்சல் பொறுப்புடன் ஆடி அபார சதமொன்றினைப் பெற்றுக் கொடுத்தார். இந்த சத உதவியுடன் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் மொத்த ஓட்டங்களை நியூசிலாந்து அண்மிக்க தொடங்கியிருந்தது.

பின்னர் டேரைல் மிச்சலின் விக்கெட் லஹிரு குமார மூலம் வீழ்த்தப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய ஐந்தாவது சதத்தினைப் பூர்த்தி செய்த டேரைல் மிச்சல் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தினை நிறைவு செய்திருந்தார்.

டேரைல் மிச்சலினை அடுத்து பின் வரிசையில் களம் வந்த மேட் ஹென்ரியும் அதிரடி கலந்த நிதானத்துடன் கைகொடுக்க நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 373 ஓட்டங்கள் எடுத்தது.

WATCH – இரண்டாவது நாளில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துக்கான காரணம் என்ன? கூறும் ராஜித

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக மேட் ஹென்ரி 3 சிக்ஸர்கள் 10 பௌண்டரிகள் அடங்கலாக தன்னுடைய நான்காவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 75 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் 18 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது ப்ளைர் டிக்னரின் அபார வேகப்பந்துவீச்சு காரணமாக 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது நியூசிலாந்தை விட 65 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில், அஞ்செலோ மெதிவ்ஸ் 20 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க Nightwatchman ஆக களம் வந்த பிரபாத் ஜயசூரிய 02 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஷோன் மார்ஷ்

இலங்கை அணி போட்டியின் ஆதிக்கத்தைப் பெறுவதற்கு இன்னும் 07 விக்கெட்டுக்கள் எஞ்சியிருக்க போட்டியின் நான்காம் நாளில் சிறந்த முன்னிலை ஒன்றினை வழங்க எதிர்பார்த்திருக்கின்றது.

அதேநேரம் இப்போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் மூலம் அஞ்செலோ மெதிவ்ஸ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 14,000 ஓட்டங்கள் என்கிற புதிய மைல் கல்லினைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நியூசிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான ப்ளைர் டிக்னர் 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand
373/10 (107.3) & 285/8 (70)

Sri Lanka
355/10 (92.4) & 302/10 (105.3)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Tom Blundell b Tim Southee 13 31 2 0 41.94
Dimuth Karunaratne c Tom Latham b Matt Henry 50 87 7 0 57.47
Kusal Mendis lbw b Tim Southee 87 83 16 0 104.82
Angelo Mathews c Mitchell Santner b Matt Henry 47 98 6 1 47.96
Dinesh Chandimal c Tom Latham b Tim Southee 39 64 6 0 60.94
Dhananjaya de Silva c Tom Blundell b Tim Southee 46 59 5 1 77.97
Niroshan Dickwella lbw b Michael Bracewell 7 13 1 0 53.85
Kasun Rajitha c William Somerville b Matt Henry 22 39 4 0 56.41
Prabath Jayasuriya c Tom Blundell b Matt Henry 13 40 0 0 32.50
Lahiru Kumara not out 13 32 2 0 40.62
Asitha Fernando  lbw b Tim Southee 10 10 2 0 100.00


Extras 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0)
Total 355/10 (92.4 Overs, RR: 3.83)
Bowling O M R W Econ
Tim Southee 26.4 10 64 5 2.42
Matt Henry 26 8 80 4 3.08
Blair Tickner 20 2 103 0 5.15
Neil Wagner 10 1 68 0 6.80
Daryl Mitchell 7 3 17 0 2.43
Michael Bracewell 3 0 17 1 5.67
Batsmen R B 4s 6s SR
Tom Latham b Asitha Fernando  67 144 7 0 46.53
Devon Conway lbw b Asitha Fernando  30 88 2 0 34.09
Kane Williamson c Dimuth Karunaratne b Lahiru Kumara 1 11 0 0 9.09
Henry Nicholls c Kasun Rajitha b Lahiru Kumara 2 6 0 0 33.33
Daryl Mitchell c Niroshan Dickwella b Lahiru Kumara 102 193 6 2 52.85
Tom Blundell c Niroshan Dickwella b Kasun Rajitha 7 22 0 0 31.82
Michael Bracewell c Niroshan Dickwella b Prabath Jayasuriya 25 57 2 0 43.86
Tim Southee c Lahiru Kumara b Kasun Rajitha 25 20 3 1 125.00
Matt Henry b Asitha Fernando  72 75 10 3 96.00
Neil Wagner c Dhananjaya de Silva b Asitha Fernando  27 24 1 3 112.50
Blair Tickner not out 2 5 0 0 40.00


Extras 13 (b 4 , lb 6 , nb 0, w 3, pen 0)
Total 373/10 (107.3 Overs, RR: 3.47)
Bowling O M R W Econ
Kasun Rajitha 31 10 104 2 3.35
Asitha Fernando  29.3 5 85 4 2.90
Lahiru Kumara 25 5 76 3 3.04
Dhananjaya de Silva 9 2 34 0 3.78
Angelo Mathews 3 0 18 0 6.00
Prabath Jayasuriya 10 1 46 1 4.60
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Tom Blundell b Blair Tickner 28 52 4 0 53.85
Dimuth Karunaratne c Henry Nicholls b Blair Tickner 17 45 1 0 37.78
Kusal Mendis c Michael Bracewell b Blair Tickner 14 55 1 0 25.45
Angelo Mathews c Tom Blundell b Henry Nicholls 115 235 11 0 48.94
Prabath Jayasuriya c Tom Blundell b Blair Tickner 6 32 0 0 18.75
Dinesh Chandimal b Tim Southee 42 107 2 0 39.25
Dhananjaya de Silva not out 47 73 7 0 64.38
Niroshan Dickwella c Tom Blundell b Matt Henry 0 4 0 0 0.00
Kasun Rajitha lbw b Matt Henry 14 21 2 0 66.67
Lahiru Kumara run out (Kane Williamson) 8 6 2 0 133.33
Asitha Fernando  c Kane Williamson b Tim Southee 0 3 0 0 0.00


Extras 11 (b 4 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 302/10 (105.3 Overs, RR: 2.86)
Bowling O M R W Econ
Tim Southee 26.3 9 57 2 2.17
Matt Henry 28 5 71 3 2.54
Blair Tickner 28 1 100 4 3.57
Neil Wagner 3 0 9 0 3.00
Daryl Mitchell 12 2 31 0 2.58
Michael Bracewell 8 1 27 0 3.38


Batsmen R B 4s 6s SR
Tom Latham b Prabath Jayasuriya 25 80 3 0 31.25
Devon Conway c & b Kasun Rajitha 5 16 0 0 31.25
Kane Williamson not out 121 194 11 1 62.37
Henry Nicholls c Kusal Mendis b Prabath Jayasuriya 20 24 1 0 83.33
Daryl Mitchell b Asitha Fernando  81 86 3 4 94.19
Tom Blundell b Asitha Fernando  3 5 0 0 60.00
Michael Bracewell c Chamika Karunaratne b Asitha Fernando  10 11 1 0 90.91
Tim Southee c Dhananjaya de Silva b Lahiru Kumara 1 2 0 0 50.00
Matt Henry run out (Kasun Rajitha) 4 3 0 0 133.33
Neil Wagner not out 0 0 0 0 0.00


Extras 15 (b 5 , lb 3 , nb 1, w 6, pen 0)
Total 285/8 (70 Overs, RR: 4.07)
Bowling O M R W Econ
Kasun Rajitha 17 5 61 1 3.59
Asitha Fernando  19 4 63 3 3.32
Prabath Jayasuriya 19 1 92 2 4.84
Lahiru Kumara 15 3 61 1 4.07



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<