சிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!

Sri Lanka tour of Zimbabwe 2025

224
Sri Lanka Tour of Zimbabwe 2025

இலங்கை கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் சிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

குறித்த இந்த தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

>>இலங்கைப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தோடு முதல்நாள் நிறைவு<<

இரண்டு ஒருநாள் போட்டிகளுடன் ஆகஸ்ட் 29ஆம் திகதி தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், T20I தொடர் செப்டம்பர் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

தொடரின் போட்டிகள் அனைத்தும் சிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள்ஆகஸ்ட் 29 (ஹராரே)
  • இரண்டாவது ஒருநாள்ஆகஸ்ட் 31 (ஹராரே)
  • முதல் T20I – செப்டம்பர் 3 (ஹராரே)
  • இரண்டாவது T20I – செப்டம்பர் 5 (ஹராரே)
  • மூன்றாவது T20I – செப்டம்பர் 7 (ஹராரே)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<