2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் T20 போட்டிகளாக இந்த ஆண்டும் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரானது ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் குழாத்தில் இணையும் முன்னணி வீரர்!
ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இம்முறை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு, 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவிருக்கின்றன.
மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை இம்முறை மகளிர் பிரீமியர் கிண்ணத் தொடரின் (Women’s Premier Cup – 2024) அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகிய மலேசியா, தாய்லாந்து, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை
| குழு A | குழு B | |
| இந்தியா | பங்களாதேஷ் | |
| பாகிஸ்தான் | இலங்கை | |
| ஐக்கிய அரபு இராச்சியம் | மலேசியா | |
| நேபாளம் | தாய்லாந்து |
| தொடர் அட்டவணை – மைதானம் தம்புள்ளை | |||||||
| திகதி | போட்டிகள் | ||||||
| 19-ஜூலை | பாகிஸ்தான் | vs | நேபாளம் | இந்தியா | vs | ஐக்கிய அரபு இராச்சியம் | |
| 20-ஜூலை | மலேசியா | vs | தாய்லாந்து | இலங்கை | vs | பங்களாதேஷ் | |
| 21-ஜூலை | நேபாளம் | vs | ஐக்கிய அரபு இராச்சியம் | இந்தியா | vs | பாகிஸ்தான் | |
| 22-ஜூலை | இலங்கை | vs | மலேசியா | பங்களாதேஷ் | vs | தாய்லாந்து | |
| 23-ஜூலை | பாகிஸ்தான் | vs | ஐக்கிய அரபு இராச்சியம் | இந்தியா | vs | நேபாளம் | |
| 24-ஜூலை | பங்களாதேஷ் | vs | மலேசியா | இலங்கை | vs | தாய்லாந்து | |
| 25-ஜூலை | ஓய்வு நாள் | ||||||
| 26-ஜூலை | அரையிறுதி 1 | அரையிறுதி 2 | |||||
| 27-ஜூலை | ஓய்வு நாள் | ||||||
| 28-ஜூலை | இறுதிப் போட்டி | ||||||
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















