Home Tamil மேஜர் லீக் தொடரின் சம்பியன்களாக தமிழ் யூனியன்

மேஜர் லீக் தொடரின் சம்பியன்களாக தமிழ் யூனியன்

210

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மேஜர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், இராணுவப்படை அணியினை வீழ்த்திய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் சம்பியன்களாக நாமம் சூடியிருக்கின்றது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைவது மேலும் உறுதி

இரு அணிகளும் மோதிய இறுதிப் போட்டியானது இன்று (02) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் தமிழ் யூனியன் தமது அரையிறுதியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியும், இராணுவப்படை அணி ஏஸ் கெபிடல் கழகத்தினை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இராணுவப்படை அணி, 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 198 ஓட்டங்களை எடுத்தது. இராணுவப்படை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அசேல குணரட்ன அரைச்சதம் தாண்டி 59 ஓட்டங்கள் குவிக்க, மகேஷ் குமார 57 ஓட்டங்களை எடுத்தார்.

மறுமுனையில், தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சு சார்பில் சந்துஷ் குணத்திலக்க மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

தொடர்ந்து போட்டியில் காலநிலை சீர்கேடு ஏற்பட போட்டியின் வெற்றி இலக்கு 37 ஓவர்களுக்கு 153 ஓட்டங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தமிழ் யூனியன் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 31.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களுடன் அடைந்தது.

சந்தகனின் போராட்டத்தினை தாண்டி இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன்

தமிழ் யூனியன் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியை உறுதி செய்த சதீர சமரவிக்ரம 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவப்படை அணியின் பந்துவீச்சு சார்பில் அசலங்க மனோஜ் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை வி.க. – 198 (49.5) அசேல குணரட்ன 59, மகேஷ் குமார 57, சந்துஷ் குணத்திலக்க 3/14, இசுரு உதான 3/31

தமிழ் யூனியன் – 153/3 (31.2) சதீர சமரவிக்ரம 58*, அசங்க மனோஜ் 2/27

முடிவு – தமிழ் யூனியன் 7 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Tamil Union Cricket and Athletic Club
153/3 (31.2)

SL Army
198/10 (49.5)

Batsmen R B 4s 6s SR
Ashan Randika b Santhush Gunathilake 0 5 0 0 0.00
Seekkuge Prasanna c Isuru Udana b Santhush Gunathilake 7 4 1 0 175.00
Lakshan Edirisinghe c Ron Chandraguptha b Isuru Udana 17 30 3 0 56.67
Himasha Liyanage c Sadeera Samarawickrama b Santhush Gunathilake 0 1 0 0 0.00
Suminda Lakshan b Dilruwan Perera 28 61 2 0 45.90
Asela Gunaratne c Sadeera Samarawickrama b Pramod Madushan 59 88 4 0 67.05
Thisara Perera b Shiran Fernando 0 6 0 0 0.00
Mahesh Kumara c Ron Chandraguptha b Navod Paranavithana 57 78 3 1 73.08
Mahesh Theekshana c Shiran Fernando b Isuru Udana 15 23 1 0 65.22
Asanka Manoj c Dhananjaya de Silva b Isuru Udana 0 3 0 0 0.00
Rashmika Siriwardhana not out 0 0 0 0 0.00


Extras 15 (b 0 , lb 4 , nb 0, w 11, pen 0)
Total 198/10 (49.5 Overs, RR: 3.97)
Bowling O M R W Econ
Shiran Fernando 6 0 38 1 6.33
Santhush Gunathilake 5 1 14 3 2.80
Pramod Madushan 7 0 39 1 5.57
Dilruwan Perera 5 1 19 1 3.80
Isuru Udana 8.5 0 31 3 3.65
Dilum Sudeera 10 1 25 0 2.50
Dhananjaya de Silva 4 0 16 0 4.00
Navod Paranavithana 4 0 12 1 3.00


Batsmen R B 4s 6s SR
Dilruwan Perera run out (Rashmika Siriwardhana) 37 55 4 0 67.27
Ron Chandraguptha lbw b Asanka Manoj 13 21 2 0 61.90
Sadeera Samarawickrama not out 58 70 4 0 82.86
Navod Paranavithana c Lakshan Edirisinghe b Asanka Manoj 32 39 3 0 82.05
Dhananjaya de Silva not out 4 3 1 0 133.33


Extras 9 (b 4 , lb 3 , nb 0, w 2, pen 0)
Total 153/3 (31.2 Overs, RR: 4.88)
Bowling O M R W Econ
Mahesh Theekshana 5 0 31 0 6.20
Thisara Perera 2 0 13 0 6.50
Seekkuge Prasanna 8 0 33 0 4.12
Asanka Manoj 7 2 27 1 3.86
Suminda Lakshan 5.2 0 22 0 4.23
Rashmika Siriwardhana 2 0 10 0 5.00
Asela Gunaratne 2 0 10 0 5.00