பங்களாதேஷுக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நடப்புச் சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
குழு ஒன்றுக்காக இன்று (29) நடைபெற்ற சுப்பர் 12 சுற்றில் 143 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலொடுத்தாடிய பங்களாதேஷ் அணி கடைசி ஓவருக்கு 13 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் கடைசி பந்துக்கு நான்கு ஓட்டங்களை பெற வேண்டிய சவாலுக்கு முகம்கொடுத்தது.
அரையிறுதி பயணத்துக்கான முக்கிய மோதலில் தென்னாபிரிக்காவை சந்திக்கும் இலங்கை
எனினும் அணித்தலைவர் மஹ்முதுல்லா அந்தப் பந்தை தவறவிட்டதால் பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்து உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி இழந்தது.
முன்னதாக துப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் முதல் பத்து ஓவர்களுக்கும் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், நிகொலஸ் பூரன் விளாசிய 40 ஓட்டங்கள் மூலம் 7 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற முடிந்தது.
இந்நிலையில் பங்களாதேஷுக்கு அரையிறுதிக்கு முன்னேற ஒரு குறுகிய வாய்ப்பு உள்ளது. சனிக்கிழமை (30) எதிர்கொள்ளும் இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று தமது குழுநிலையின் ஐந்து போட்டிகளிலும் வென்ற நிலையில், ஏனைய போட்டி முடிவுகளின்படி அடுத்து ஐந்து அணிகளும் தலா நான்கு புள்ளிகளுடன் இருக்க வேண்டும்.
அப்போது நிகர ஓட்ட வீதம் அடிப்படையில் அரையிறுதிக்கு நுழையும் அடுத்த அணி தேர்வு செய்யப்படும். தற்போது -1.069 ஓட்ட வீதத்தை பெற்றிருக்கும் பங்களாதேஷ் முன்னேற்றம் காண்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.
நான் நிறவெறிக்கு ஆதராவானவன் அல்ல – குயின்டன் டி கொக்
இதன்போது பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்ததால் தேவைப்படும் ஓட்ட வேகத்திற்கு ஏற்ப ஓட்டங்களை குவிப்பதற்கு தடுமாறியது. விக்கெட் காப்பாளர் லிடன் தாஸ்
அதிகபட்சமாக 43 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார். வேகமாக ஆடி ஓட்டங்களை பெற முயன்ற மஹ்மதுல்லா 24 பந்துகளில் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றார்.
சுகவீனம் காரணமாக கிரோன் பொலார்ட் களத்தடுப்பில் ஈடுபடாத நிலையில் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைமை பொறுப்பை ஏற்ற விக்கெட் காப்பாளர் பூரன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவர் நெருக்கடியான நேரத்தில் துடுப்பெடுத்தாட வந்து 22 பந்துகளில் ஒரு பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 40 ஓட்டங்களை பெற்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<